வங்கதேச கேப்டன் ஷாகிப் அல் ஹசன் அந்த நாட்டில் நடக்க இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடந்து முடிந்த கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 தொடரில் இடம் பெற்று விளையாடிய வங்கதேச அணியானது 9 போட்டிகளில் 2ல் வெற்றி 7ல் தோல்வி அடைந்து முதல் அணியாக தொடரிலிருந்து வெளியேறியது. கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் வங்கதேச அணிக்காக விளையாடி வரும் ஷாகிப் அப் ஹசன் 5 முறை உலகக் கோப்பை தொடரில் விளையாடிய வீரர் என்ற சாதனையை படைத்தார்.
அமலுக்கு வருகிறது புதிய விதிமுறை – ஓவர்களுக்கு இடையில் 60 வினாடி, 3 முறை தாமதமானால் 5 ரன் அபராதம்!
சிறந்த ஆல் ரவுண்டராக அணிக்கு பலம் சேர்த்து வருகிறார். இந்த நிலையில், வங்கதேசத்தில் நடக்க இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவாமி லீக் கட்சியின் சார்பில் ஷாகிப் அல் ஹசன் போட்டியிட இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான விண்ணப்பத்தை ஷாகிப் அல் ஹசன் பெற்றுவிட்டதாக சொல்லப்படுகிறது.
ஆவாமி லீக் கட்சி சார்பில் போட்டியிடும் ஷாகிப் அல் ஹசன் சொந்த ஊரான மகுரா தொகுதி அல்லது டாக்கா தொகுதியில் போட்டியிட அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. தேர்தலில் போட்டியிடும் நிலையில், அவர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு முன்னதாக வங்கதேச அணியின் கேப்டனாக இருந்த மோர்டசா 2018 ஆம் ஆண்டு அரசியலில் களமிறங்கினார். தற்போது ழுழு நேர அரசியலில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.