அண்டர் 19 உலகக் கோப்பையை இலங்கை நடத்தயிருந்த நிலையில், அதனை தென் ஆப்பிரிக்காவிற்கு மாற்றி ஐசிசி அறிவித்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை இலங்கையில் இருந்து தென் ஆப்பிரிக்காவுக்கு மாற்றியுள்ளது. இலங்கை கிரிக்கெட்டில் ஏற்பட்டுள்ள நிர்வாக நிச்சயமற்ற தன்மையை கருத்தில் கொண்டு ஐசிசி இந்த முடிவை எடுத்துள்ளது. அகமதாபாத்தில் இன்று ஐசிசி வாரியக் கூட்டம் நடந்தது. அகமதாபாத்திலுள்ள ஐடிசி நர்மதா என்ற நட்சத்திர ஹோட்டலில் நடந்த இந்த கூட்டத்தில் இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் வெளியேற்றப்பட்ட தலைவர் ஷம்மி சில்வா கலந்து கொண்டார்.
இந்த கூட்டத்தில் நடந்த விரிவான ஆலோசனைகளுக்கு பிறகு இலங்கை கிரிகெட் வாரியம் இடைநிறுத்தப்பட்டதை உறுதி செய்தது. இலங்கை தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கும். ஆனால் கிரிக்கெட் வாரியம் இடைநிறுத்தப்பட்டது ரத்து செய்யப்படாது என்று வாரியம் தெளிவாக தெரிவித்துள்ளது. வரும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி முதல் பிப்ரவரி15 ஆம் தேதி வரையில் இலங்கையில் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை நடக்க இருந்தது. ஆனால் இது தற்போது தென் ஆப்பிரிக்காவிற்கு மாற்றப்பட்டுள்ளது.
யார் இந்த தாஜி? ரோகித் சர்மாவிற்கும், மனைவி ரித்திகாவிற்கும் தியானம் கற்றுக் கொடுத்த ஆன்மீக குரு!
ஆனால், ஜனவரி 10 முதல் பிப்ரவரி 10 வரையில் தென் ஆப்பிரிக்காவில் SA20 (எஸ்ஏ20) லீக் தொடரின் 2ஆவது சீசன் நடக்க இருக்கிறது. எனினும், இரண்டும் ஒரே நேரத்தில் நடப்பதால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் முதன்மை நிர்வாக அதிகாரி Enoch Nkwe கூறினார். அண்டர் 19 உலகக் கோப்பையை நடத்துவதற்கு ஓமன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸூம் பரிசீலிக்கப்பட்டது. ஆனால், போதுமான உள்கட்டமைப்பு வசதிகள் அனைத்தும் தென் ஆப்பிரிக்கா கொண்டுள்ளதால் அங்கு மாற்றியமைக்கப்பட்டது. இலங்கை கிரிக்கெட் வாரியம் இடைநிறுத்தப்பட்டாலும் இலங்கை அணியானது தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடும் என்று வாரியம் முடிவு செய்தது.
முதல் முறை அல்ல... மகளிர் கிரிக்கெட்டிலும் தோல்விக்குப் பின் தோள் கொடுத்த பிரதமர் மோடி!
இது குறித்து பேசிய இலங்கை கிரிக்கெட் வாரிய தலைவர் சில்வா, தொடர்ந்து இலங்கை அணியை விளையாட அனுமதிக்குமாறு ஐசிசியிடம் கோரிக்கை வைகப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட உறுப்பினர்கள் சர்வதேச போட்டிகளில் விளையாட அனுமதி அளித்துள்ளனர். தென் ஆப்பிரிக்காவில் நடக்கும் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டிகளில் இலங்கை அணி பங்கேற்கும் என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
1983ல் இந்திய கிரிக்கெட் வீரர்கள் பெற்ற சம்பளம் எவ்வளவு தெரியுமா? வைரல் போட்டோ..