
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நாளை 5ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19 ஆம் தேதி வரையில் நடக்கிறது. இந்தியா, ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் என்று 10 அணிகள் இடம் பெற்றுள்ள இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் 45 லீக் போட்டிகள், 2 அரையிறுதிப் போட்டிகள் மற்றும் ஒரு இறுதிப் போட்டி என்று மொத்தமாக 48 போட்டிகள் நடக்க இருக்கிறது.
World Cup 2023: உலகக் கோப்பை டிராபியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட கேப்டன்கள்!
கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரானது சென்னை, பெங்களூரு, கொல்கத்தா, புனே, லக்னோ, டெல்லி, அகமதாபாத், ஹைதராபாத், தர்மசாலா, மும்பை ஆகிய 10 மைதானங்களில் இந்தப் போட்டி நடத்தப்படுகிறது. உலகக் கோப்பைக்கான போட்டி அட்டவணை வெளியான போது உலகக் கோப்பைக்கான 10 மைதானங்களிலும் உள்கட்டமைப்பு, ஸ்டேடியம் புனரமைப்பு ஆகியவற்றிற்காக பிசிசிஐ ரூ.50 கோடி வீதம் ரூ.500 கோடி வரையில் வழங்கியிருந்தது.
இந்த நிலையில் தான் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச விமான நிலையம் பராமரிப்பின்றி இருக்கும் இருக்கைகள் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே இந்த மைதானத்தில் தான உலகக் கோப்பை வார்ம் அப் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில், ரசிகர்கள் யாரும் வராத போதிலும் நாளை முதல் போட்டிகள் தொடங்கப்பட இருக்கிறது.
ஹைதராபாத் மைதானத்தில், வரும் 6 ஆம் தேதி பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி நடக்க இருக்கிறது. இந்த நிலையில், தான் இருக்கைகள் இப்படி பராமரிப்பின்றி இருக்கும் நிலையில் இதில் அமர்ந்து தான் ரசிகர்கள் கிரிக்கெட் பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், உண்மையில், கிரிக்கெட் எழுத்தாளர் தனது டுவிட்டர் பக்கத்தில் இருக்கைகள் தொடர்பான புகைப்படங்களை பகிர்ந்து, அதில், மேற்கு டெரஸ் ஸ்டாண்டுகள் மட்டுமே பழைய நிலையில் இருக்கிறது.
World Cup Free Tickets: உலகக் கோப்பையில் 40,000 பெண்களுக்கு இலவச டிக்கெட், உணவு வழங்க முடிவு!
உலகக் கோப்பைக்கு முன் அனைத்து இருக்கைகளையும் மாற்றுவதற்கு ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்திற்கு போதுமான நேரம் இல்லை என்று தெரிகிறது. போட்டிக்கு முன் அவர்கள் பழைய இருக்கைகளை சுத்தம் செய்தார்கள். மைதானத்தில் உள்ள மற்ற வசதிகள் சிறப்பாக உள்ளன, மேலும் இந்தியாவின் ஹோஸ்டிங் திறன் குறித்து யாருக்கும் எந்த சந்தேகமும் இருக்க வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக வீடியோ ஒன்றையும் அவர் பதிவிட்டுள்ளார்.
ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடக்கும் போட்டிகள்:
அக்டோபர் 06 – பாகிஸ்தான் – நெதர்லாந்து - பிற்பகல் 2 மணி
அக்டோபர் 09 – நியூசிலாந்து – நெதர்லாந்து – பிற்பகல் 2 மணி
அக்டோபர் 10 – பாகிஸ்தான் – இலங்கை – பிற்பகல் 2 மணி