உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில், அனைத்து கேப்டன்கள் ஒன்றாக இணைந்து டிராபியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளனர்.
இந்தியாவில் நாளை 5ஆம் தேதி முதல் நவம்பர் 19 ஆம் தேதி வரையில் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடக்கிறது. இந்தியா, இங்கிலாந்து, இலங்கை என்று 10 அணிகள் இடம் பெற்று விளையாடுகின்றன. இந்த தொடர் சென்னை, பெங்களூரு, கொல்கத்தா, அகமதாபாத் என்று 10 மைதானங்களில் நடத்தப்படுகிறது. 2023 ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை தொடக்க விழா ரத்து செய்யப்பட்ட நிலையில் அனைத்து கேப்டன்களின் அணி வகுப்பு நிகழ்ச்சி மட்டும் இன்று குஜராத் கிரிக்கெட் சங்க கிளப்ஹவுஸில் நடந்தது.
இந்த நிலையில் 10 அணிகளின் கேப்டன்களும் கலந்து கொண்டு கிரிக்கெட் வர்ணனையாளர்கள், பத்திரிக்கையாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தனர். அதன் பிறகு அனைத்து அணிகளின் கேப்டன்களும் ஒன்றாக இணைந்து உலகக் கோப்பை டிராபியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Captains with the World Cup Trophy.
- The Carnival begins tomorrow. pic.twitter.com/W2FgHwSxgM
Captain at Narendra Modi Stadium with the World Cup Trophy.
- A beautiful picture. pic.twitter.com/CKqkG8HFPC
Kane Williamson is the only captain from the 2019 batch in this World Cup. pic.twitter.com/eYtHgsDO7B
— Johns. (@CricCrazyJohns)
Kane Williamson is the only captain from the 2019 batch in this World Cup. pic.twitter.com/eYtHgsDO7B
— Johns. (@CricCrazyJohns)கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பையின் போது இருந்த நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் 2023 ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பையிலும் இடம் பெற்றுள்ளார்.
2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கேப்டன்
விராட் கோலி கேப்டனாக இருந்த போது, 2023 ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை கேப்டனாக ரோகித் சர்மா செயல்படுகிறார்.
இந்தியா – ரோகித் சர்மா – விராட் கோலி
இலங்கை – தசுன் ஷனாகா
ஆஸ்திரேலியா – பேட் கம்மின்ஸ் – ஆரோன் பிஞ்ச்
நியூசிலாந்து – கேன் வில்லியம்சன் – கேன் வில்லியம்சன்
இங்கிலாந்து – ஜோஸ் பட்லர் – இயான் மோர்கன்
பாகிஸ்தான் – பாபர் அசாம் – சர்பராஸ் அகமது
வங்கதேசம் – ஷாகிப் அல் ஹசன் - மஷ்ரஃப் பின் மோர்தசா
தென் ஆப்பிரிக்கா – டெம்பா பவுமா - பாப் டூப்ளெசிஸ்
ஆப்கானிஸ்தான் - ஹஷ்மத்துல்லா ஷாஹிதி - குல்பாடின் நைப்
நெதர்லாந்து - ஸ்காட் எட்வர்ட்ஸ் – கடந்த 2019 ஆம் ஆண்டு இடம் பெறவில்லை.