
ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வரும் ஐபிஎல் திருவிழாவின் 16ஆவது சீசன் இன்று பிரம்மாண்டமாக தொடங்க இருக்கிறது. இதில், ராஷ்மிகா மந்தனா, தமன்னா, கத்ரீனா கைஃப், டைகர் ஷெராஃப் ஆகியோரது கலை நிகழ்ச்சிகளும், அர்ஜித் சிங்கின் இசை நிகழ்ச்சியும் நடக்க இருக்கிறது. இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ள இந்த நிகழ்ச்சியை எப்படி மொபைல் போன், லேப்டாப்பில் பார்ப்பது என்பது குறித்து பார்க்கலாம் வாங்க...
கடந்த ஐபிஎல் சீசன் வரையில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரை ஹாட் ஸ்டார் மூலமாக மொபைல் போன் மற்றும் லேப் டாப் ஆகியவற்றில் பார்த்தனர். ஆனால், இந்த சீசனின் ஐபிஎல் தொடர் ஒளிபரப்பு உரிமையை ஜியோ சினிமா நிறுவனம் கைப்பற்றியுள்ளது. மேலும், இந்த ஐபிஎல் தொடரை எந்த கட்டணமும் இல்லாமல் ஜியோ சினிமாவில் பார்க்கலாம். ஸ்மார்ட் டிவி, மொபைல் போன் ஆகியவற்றில் ஐபிஎல் தொடரை இலவசமாக பார்க்க ஜியோ சினிமா ஆப் டவுன்லோடு செய்து அதன் வழியே பார்க்கலாம்.
லேப்டாப்பில் பார்க்க விரும்புவோர் jiocinema.com என்ற தளத்திற்கு சென்று பார்த்து மகிழலாம். ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி, பெங்காலி, போஜ்புரி உள்ளிட்ட 12 மொழிகளில் வர்ணனை செய்யப்படுகிறது. உங்களது வசதிக்கேற்ப நீங்கள் மொழியை தேர்வு செய்து கொள்ளலாம். இசை நிகழ்ச்சியைத் தொடர்ந்து இன்று நடக்கும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர்கொள்கிறது.
IPL 2023: GT vs CSK : பென் ஸ்டோக்ஸ் தான் ஓபனிங்கா? ரஹானே என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?
இதுவரையில் 2 போட்டிகளில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், 2 போட்டியிலுமே குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. ஆனால், அகமதாபாத் மைதானத்தைப் பொறுத்தவரையில் இரு அணிகளும் விளையாடியது இல்லை. முதன் முறையாக இன்றைய போட்டியில் இரு அணிகளும் மோதுகின்றன.