BAN vs IRE: பால் ஸ்டர்லிங் அதிரடி அரைசதம்.. வங்கதேசத்தை ஊதித்தள்ளிய அயர்லாந்து

Published : Mar 31, 2023, 05:14 PM IST
BAN vs IRE: பால் ஸ்டர்லிங் அதிரடி அரைசதம்.. வங்கதேசத்தை ஊதித்தள்ளிய அயர்லாந்து

சுருக்கம்

வங்கதேசத்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் கேப்டன் பால் ஸ்டர்லிங்கின் அதிரடி அரைசதத்தால் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது அயர்லாந்து அணி. ஆனால் வங்கதேச அணி 2-1 என டி20 தொடரை வென்றது.  

அயர்லாந்து அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை வங்கதேச அணி வென்ற நிலையில், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று வங்கதேச அணி 2-0 என டி20 தொடரை வென்றுவிட்ட நிலையில், கடைசி டி20 போட்டி நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

வங்கதேச அணி:

லிட்டன் தாஸ் (விக்கெட் கீப்பர்), ரோனி தாலுக்தர், நஜ்முல் ஹுசைன் ஷாண்டோ, ஷகிப் அல் ஹசன் (கேப்டன்), டௌஹிட் ரிடாய், ஷமிம் ஹுசைன், ரிஷத் ஹுசைன், நசும் அகமது, டஸ்கின் அகமது, ஷோரிஃபுல் இஸ்லாம், ஹசன் மஹ்மூத்.

IPL 2023:காயத்தால் விலகிய முகேஷ் சௌத்ரிக்கு மாற்றாக முன்னாள் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரரை ஒப்பந்தம் செய்தது சிஎஸ்கே

அயர்லாந்து அணி:

பால் ஸ்டர்லிங் (கேப்டன்), ரோஸ் அடைர், லார்கன் டக்கர் (விக்கெட் கீப்பர்), ஹாரி டெக்டார், காரெத் டிலானி, ஜார்ஜ் டாக்ரெல், கர்டிஸ் காம்ஃபெர், மார்க் அடைர், ஃபியான் ஹேண்ட், மேத்யூ ஹம்ஃப்ரேஸ், பெஞ்சமின் ஒயிட். 

முதலில் பேட்டிங் ஆடிய வங்கதேச அணியில் ஷமிம் ஹுசைன் மட்டுமே பொறுப்புடன் பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். 42 பந்தில் ஷமிம் ஹுசைன் 51 ரன்கள் அடித்தார். அவரைத்தவிர மற்ற அனைத்து வீரர்களுமே சொற்ப ரன்களுக்கு மளமளவென ஆட்டமிழக்க, 19.2 ஓவரில் 124 ரன்களுக்கு ஆல் அவுட்டானது வங்கதேச அணி. அயர்லாந்து அணியில் அபாரமாக பந்துவீசிய மார்க் அடைர் அதிகபட்சமாக 3 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

IPL 2023: இந்த சீசனில் நான் ரொம்ப எதிர்பார்க்குற பிளேயர் அவர்தான்! வேற லெவல் சம்பவம் வெயிட்டிங் - ஹர்பஜன் சிங்

125 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய அயர்லாந்து அணியின் கேப்டனும் தொடக்க வீரருமான பால் ஸ்டர்லிங் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த ஸ்டர்லிங் 44 பந்தில் 10 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 77 ரன்களை குவித்தார். அவரது அதிரடி அரைசதத்தால் 14வது ஓவரிலேயே இலக்கை அடித்து அயர்லாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஏற்கனவே இந்த டி20 தொடரை இழந்துவிட்ட அயர்லாந்து அணி, கடைசி போட்டியில் ஆறுதல் வெற்றி பெற்றது.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஐபிஎல் மினி ஏலம்.. 1005 வீரர்களை தூக்கி எறிந்த BCCI.. 350 வீரர்களுடன் லிஸ்ட் ரெடி
தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் ஹர்திக் பாண்ட்யா படைக்க போகும் 'மெகா' இரட்டை சாதனை!