இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை போட்டிக்கான டிக்கெட் புக் மை ஷோ மற்றும் பேடிஎம் பிளாட்பார்ம்களில் கிடைக்கின்றன.
இந்தியா நடத்தும் ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை 2023க்கான போட்டி அட்டவணை சமீபத்தில் வெளியானது. அதன்படி வரும் அக்டோபர் 5ஆம் தேதி முதல் நவம்பர் 19 ஆம் தேதி வரையில் இந்தியாவில் பல மைதானங்களில் நடக்கிறது. அதன் முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. அக்டோபர் 8ஆம் தேதி நடக்கும் இந்தப் போட்டியானது அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடக்கிறது.
Jonny Bairstow: அலெக்ஸ் கேரியின் புத்திசாலித்தனத்திற்கு அஸ்வின் பாராட்டு!
இந்தியா தனது முதல் போடியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியானது அக்டோபர் 8ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடக்கிறது. இந்தப் போட்டியைத் தொடர்ந்து இந்தியா தனது 2ஆவது போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. டெல்லி, அருண் ஜெட்லி மைதானத்தில் அக்டோபர் 11 ஆம் தேதி இந்தப் போட்டி நடக்கிறது.
இந்திய அணியின் பவுலிங் மோசமாக உள்ளது; பாகிஸ்தானுக்கு 60 சதவிகித வாய்ப்பு உள்ளது – சயீத் அஜ்மல்!
கிட்டத்தட்ட 30 ஆயிரத்திற்கும் அதிகமான இருக்கைகளை கொண்ட இந்த மைதானத்திற்கு அதிகப்படியான ரசிகர்கள் வருவார்கள் என்பதால், இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிக்கு இடையிலான இந்தப் போட்டிக்கான டிக்கெட் அதிகம் தேவைப்படும். எனினும், இன்னும் டிக்கெட் விற்பனை தொடங்கப்படவில்லை என்றாலும், விரைவில் டிக்கெட் விற்பனை தொடங்க இருக்கிறது.
155 அடிச்சும் வீணாப்போச்சே: 43 ரன்களில் 2ஆவது வெற்றியை பெற்ற ஆஸ்திரேலியா!
கவுண்டர் டிக்கெட் கிடைப்பதில் அதிக சிரமங்களை சந்திக்க நேரிடும் என்பதால், ரசிகர்கள் டிஜிட்டல் தளங்களை பயன்படுத்திக் கொள்வது நல்லது. இதற்காக பேடிஎம் மற்றும் புக் மை ஷோ போன்ற பல்வேறு டிக்கெட் விற்பனை தளங்களுக்கு சென்று டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம். இது தவிர, ஐசிசியின் அதிகாரப்பூர்வ இணையதளமும் டிக்கெட் வாங்குவதற்கான வாய்ப்பை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
6ஆவது போட்டியிலும் தோற்ற பா11சி திருச்சி அணி: சிலம்பரசன் 5 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை!