இந்திய அணியின் பவுலிங் மோசமாக உள்ளது; பாகிஸ்தானுக்கு 60 சதவிகித வாய்ப்பு உள்ளது – சயீத் அஜ்மல்!

By Rsiva kumar  |  First Published Jul 3, 2023, 12:13 PM IST

இந்திய அணியின் பந்து வீச்சு பாகிஸ்தான் வீரர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்காது என்று முன்னாள் வீரர் சயீத் அஜ்மல் கூறியுள்ளார்.


உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கி நவம்பவர் 19 ஆம் தேதி வரையில் நடக்கிறது. இந்தியா தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி அக்டோபர் 8ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் நடக்கிறது.

இப்படியொரு வெற்றி தேவையே இல்லை – பேர்ஸ்டோவ் அவுட் சர்ச்சை, பதிலடி கொடுத்த பென் ஸ்டோக்ஸ்!

Tap to resize

Latest Videos

இரண்டாவது போட்டியில் இந்தியா, ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி அக்டோபர் 11 ஆம் தேதி டெல்லியில் நடக்கிறது. இதையடுத்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி அக்டோபர் 15 ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடக்கிறது.

இந்த நிலையில், பாகிஸ்தான் அணிக்கு வெற்றி பெறுவதற்கு 60 சதவிகித வாய்ப்புகள் உள்ளதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சயீத் அஜ்மல் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: இந்திய அணியின் பந்து வீச்சைப் பொறுத்த வரையில் பலவீனமானதாக இருக்கிறது. இது பாக், அணியின் பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தும் வகையில் இருக்காது.

155 அடிச்சும் வீணாப்போச்சே: 43 ரன்களில் 2ஆவது வெற்றியை பெற்ற ஆஸ்திரேலியா!

முகமது சிராஜ் மற்றும் முகமது ஷமி இருவரும் சிறப்பாக பந்து வீசி வருகின்றனர். சுழற்பந்து வீச்சாளரான ரவீந்திர ஜடேஜா உலகக் கோப்பை கிரிக்கெட்டில் முக்கியமானவராக கருதப்படுகிறார். ஜஸ்ப்ரித் பும்ரா பாகிஸ்தானுக்கு அச்சுறுத்தலாக இருக்கலாம். ஆனால், அவர் தகுதியற்றவராக இருக்கிறார். இன்னும், தனது உடல் தகுதிக்கான பயிற்சியில் தீவிரமாக இருந்து வருகிறார். ஆகையால், அவருக்கு உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இடம்பெறும் வாய்ப்பு குறைவு தான்.

பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் தலைமையிலான அணி இந்தியாவிற்கு எதிரான போட்டியில் வெற்றி பெறுவதற்கு 60 சதவிகித வாய்ப்புகள் உள்ளது. இந்தியாவின் பேட்டிங் பலம் வாய்ந்ததாக இருக்கலாம். ஆனால், எங்களிடம் ஆபத்தான் பந்து வீச்சாளர்கள் இருக்கின்றனர். இப்போதைக்கு பாகிஸ்தானுக்கு 60 சதவிகித வாய்ப்பு இருப்பதாக நான் கூறுவேன்.

6ஆவது போட்டியிலும் தோற்ற பா11சி திருச்சி அணி: சிலம்பரசன் 5 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை!

இந்தியா குறைவான ஸ்கோர் எடுத்தால், அந்தப் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெறும் என்று அவர் கூறியுள்ளார். ஆனால், உலகக் கோப்பை ஒரு நாள் போட்டியில் இந்தியாவை இதுவரையில் பாகிஸ்தான் ஒரு போட்டியில் கூட வீழ்த்தியதில்லை. இதுவரையில் இந்தியாவும் பாகிஸ்தானும் உலகக் கோப்பையில் 7 போட்டிகளில் மோதியுள்ளன. இதில், 7 போட்டியிலும் இந்தியாவே வெற்றி கண்டுள்ளது.

ஆனால், இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய 132 போட்டிகளில் இந்தியா 55 ஒரு நாள் போட்டிகளிலும், பாகிஸ்தான் 73 ஒரு நாள் போட்டிகளிலும் வெற்றி கண்டுள்ளன. 4 போட்டிக்கு முடிவு இல்லை.

click me!