இப்படியொரு வெற்றி தேவையே இல்லை – பேர்ஸ்டோவ் அவுட் சர்ச்சை, பதிலடி கொடுத்த பென் ஸ்டோக்ஸ்!

By Rsiva kumar  |  First Published Jul 3, 2023, 11:12 AM IST

ஜானி பேர்ஸ்டோ இடத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் இருந்திருந்தால், அப்பீல் கூட செய்திருக்க மாட்டேன் என்றும், இப்படியான வெற்றியை பெற விரும்பவில்லை என்றும் இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கூறியுள்ளார்.


இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடர் தற்போது நடந்து வருகிறது. இதில், 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட முதல் போட்டியில் ஆஸ்திரேலியா 2 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உலகக் கோப்பையில் இந்தியா மற்றும் இலங்கை, அதே பிளேஸ், அதே மைதானம்!

Tap to resize

Latest Videos

இதையடுத்து ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸை ஆடி 416 ரன்கள் எடுத்தது. இதைத் தொடர்ந்து இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸை ஆடியது. இதில், பென் டக்கெட் 98 ரன்கள் சேர்த்தார். ஹாரி ப்ரூக் 50 ரன்கள் சேர்த்தார். ஜாக் கிராவ்லி 48 ரன்களில் ஆட்டமிழந்தார்.

155 அடிச்சும் வீணாப்போச்சே: 43 ரன்களில் 2ஆவது வெற்றியை பெற்ற ஆஸ்திரேலியா!

இறுதியாக இங்கிலாந்து 325 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் 91 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலியா 2ஆவது இன்னிங்ஸில் 279 ரன்கள் எடுத்தது. இதன் மூலமாக இங்கிலாந்து அணிக்கு 371 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து இங்கிலாந்து தனது 2ஆவது இன்னிங்ஸை ஆடி வருகிறது. தற்போது வரையில் இங்கிலாந்து 4 விக்கெட் இழப்பிற்கு 52 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. இதில், இங்கிலாந்தின் தொடக்க வீரர் ஜாக் கிராவ்லி 3 ரன்னிலும், ஒல்லி போப் 3 ரன்னிலும், ஜோ ரூட் 18 ரன்னிலும், ஹாரி ப்ரூக் 4 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

6ஆவது போட்டியிலும் தோற்ற பா11சி திருச்சி அணி: சிலம்பரசன் 5 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை!

என்னதான் பொறுமையாக ஆடினாலும் பென் டக்கெட் 112 பந்துகளில் 9 பவுண்டரி உள்பட 83 ரன்கள் வரையில் எடுத்து ஆட்டமிழந்துள்ளார். அப்போது இங்கிலாந்து 5 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்ததாகத் தான் இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஜேனி பேர்ஸ்டோ 10 ரன்களாக இருந்த போது, கேமரூன் க்ரீன் ஓவரை எதிர்கொண்டார். அந்த ஓவரின் கடைசி பந்தை ஆஃப் ஷைடுக்கு வெளியில் கொஞ்சம் வைடாக வீசினார்.

போராடி தோற்ற சீகம் மதுரை பாந்தர்ஸ்; லைகா 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!

அதனை அடிக்காமல் விட்டு விடவே, விக்கெட் கீப்பரான அலெக்ஸ் கேரி, பந்தை பிடித்தார். அப்போது ஜானி பேர்ஸ்டோவ் க்ரீஸை விட்டு வெளியில் செல்லவே, அந்த நேரம் பார்த்து கேரி பந்தை ஸ்டெம்பை நோக்கி வீசினார். இதில், ஸ்டெம்பில் பந்து சரியாக படவும், ஜானி பேர்ஸ்டோவ் க்ரீஸை விட்டு வெளியில் நிற்பதும் சரியாக இருந்தது. இதையடுத்து அலெக்ஸ் கேரி நடுவரிடம் அப்பீல் செய்தார். ஆனால், கேமரூன் க்ரீன் கொஞ்சம் குழப்பமாகவே இருந்தார்.

ஆட்டம் காட்டிய சுரேஷ் குமார், ஷாருக்கான்: லைகா கோவை கிங்ஸ் 208 ரன்கள் குவிப்பு!

இதனால், அதிர்ச்சி அடைந்த பேர்ஸ்டோவ் அமைதியாக வெளியேறினார். ஒரு பக்கம் அதிரடியாக ஆடிக் கொண்டிருந்த பென் ஸ்டோக்ஸ் சதம் விளாசிய நிலையில், 214 பந்துகளில் 9 பவுண்டரி, 9 சிக்ஸர்கள் உள்பட 155 ரன்கள் சேர்த்து தனது பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்டமிழந்தார். க்ரீன் வீசிய ஒரு ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் விளாசினார்.

இதன் மூலமாக 4ஆவது இன்னிங்ஸில் அதிகபட்ச ரன்கள் எடுத்தவர்களின் பட்டியலில் பென் ஸ்டோக்ஸ் இடம் பெற்றார். இதற்கு முன்னதாக பட்சர் 173*, ரண்டால் 174, அதெர்டான் 185*, பில் எட்ரிச் 219 என்று ரன்கள் சேர்த்தனர். பென் ஸ்டோக்ஸ் ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு நம்பிக்கை அதிகமானது. அதற்கேற்ப இங்கிலாந்து வீரர்களும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியாக இங்கிலாந்து தனது 2ஆவது இன்னிங்ஸில் 327 ரன்கள் சேர்த்து 43 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இதன் மூலமாக 2ஆவது டெஸ்ட் போட்டியிலும் தோல்வி அடைந்தது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக ஆஸ்திரேலியா 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் தற்போது 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்த நிலையில் தோல்விக்கு பிறகு பேசிய பென் ஸ்டோக்ஸ் கூறியிருப்பதாவது: எனக்கு எதிராக திட்டமிட்டு எனது விக்கெட்டை அவர்கள் வீழ்த்திவிட்டார்கள். எனினும், இந்தப் போட்டி சிறப்பான போட்டியாக இருந்தது. இன்னும் 3 போட்டிகளில் வெற்றி பெறுவோம் என்று நம்புகிறேன். பேர்ஸ்டோவ்வின் விக்கெட்டைப் பொறுத்தவரையில் நடுவரளிடம் ஓவர்கள் முடிந்துவிட்டதா என்று கேள்வி எழுப்பினேன், ஆனால், அதற்கு அவர்கள் இல்லை என்று பதில் அளித்தார்கள். அதனால், அது அவுட் தான். இதுவே பேர்ஸ்டோவின் இடத்தில் ஆஸி வீரர்கள் இருந்திருந்தால் நான் அப்பீல் செய்திருக்க மாட்டேன். என்னைப் பொறுத்த வரையில் இப்படியொரு வெற்றி தேவை இல்லை என்று தான் முடிவு செய்வேன் என்று கூறியுள்ளார்.

click me!