Jonny Bairstow: அலெக்ஸ் கேரியின் புத்திசாலித்தனத்திற்கு அஸ்வின் பாராட்டு!

Published : Jul 03, 2023, 01:15 PM IST
Jonny Bairstow: அலெக்ஸ் கேரியின் புத்திசாலித்தனத்திற்கு அஸ்வின் பாராட்டு!

சுருக்கம்

புத்திச்சாலித்தனமாக இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோவை ஆஸ்திரேலியா விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி ஆட்டமிழக்கச் செய்துள்ளார் என்று அவரை இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பாராட்டியுள்ளார்.

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸை ஆடி 416 ரன்கள் எடுத்தது. இதைத் தொடர்ந்து இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸை ஆடியது. இதில், இங்கிலாந்து 325 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இந்திய அணியின் பவுலிங் மோசமாக உள்ளது; பாகிஸ்தானுக்கு 60 சதவிகித வாய்ப்பு உள்ளது – சயீத் அஜ்மல்!

பின்னர் 91 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலியா 2ஆவது இன்னிங்ஸில் ஆடி 279 ரன்கள் எடுத்தது. இதன் மூலமாக இங்கிலாந்து அணிக்கு 371 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து இங்கிலாந்து தனது 2ஆவது இன்னிங்ஸை ஆடியது. தொடக்க வீரர்கள் ஜாக் கிராவ்லி 3 ரன்களில் வெளியேறினார். போப் 3 ரன்களிலும், ஜோ ரூட் 18 ரன்னிலும், ஹாரி ப்ரூக் 4 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

என்னதான் பொறுமையாக ஆடினாலும் பென் டக்கெட் 112 பந்துகளில் 9 பவுண்டரி உள்பட 83 ரன்கள் வரையில் எடுத்து ஆட்டமிழந்துள்ளார். அப்போது இங்கிலாந்து 5 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்ததாகத் தான் இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஜேனி பேர்ஸ்டோ 10 ரன்களாக இருந்த போது, கேமரூன் க்ரீன் ஓவரை எதிர்கொண்டார். அந்த ஓவரின் கடைசி பந்தை ஆஃப் ஷைடுக்கு வெளியில் கொஞ்சம் வைடாக வீசினார்.

155 அடிச்சும் வீணாப்போச்சே: 43 ரன்களில் 2ஆவது வெற்றியை பெற்ற ஆஸ்திரேலியா!

அதனை அடிக்காமல் விட்டு விடவே, விக்கெட் கீப்பரான அலெக்ஸ் கேரி, பந்தை பிடித்தார். அப்போது ஜானி பேர்ஸ்டோவ் க்ரீஸை விட்டு வெளியில் செல்லவே, அந்த நேரம் பார்த்து கேரி பந்தை ஸ்டெம்பை நோக்கி வீசினார். இதில், ஸ்டெம்பில் பந்து சரியாக படவும், ஜானி பேர்ஸ்டோவ் க்ரீஸை விட்டு வெளியில் நிற்பதும் சரியாக இருந்தது. இதையடுத்து அலெக்ஸ் கேரி நடுவரிடம் அப்பீல் செய்தார். ஆனால், கேமரூன் க்ரீன் கொஞ்சம் குழப்பமாகவே இருந்தார்.

இதனால், அதிர்ச்சி அடைந்த பேர்ஸ்டோவ் அமைதியாக வெளியேறினார். ஒரு பக்கம் அதிரடியாக ஆடிக் கொண்டிருந்த பென் ஸ்டோக்ஸ் சதம் விளாசிய நிலையில், 214 பந்துகளில் 9 பவுண்டரி, 9 சிக்ஸர்கள் உள்பட 155 ரன்கள் சேர்த்து தனது பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்டமிழந்தார். க்ரீன் வீசிய ஒரு ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் விளாசினார்.

6ஆவது போட்டியிலும் தோற்ற பா11சி திருச்சி அணி: சிலம்பரசன் 5 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை!

இதன் மூலமாக 4ஆவது இன்னிங்ஸில் அதிகபட்ச ரன்கள் எடுத்தவர்களின் பட்டியலில் பென் ஸ்டோக்ஸ் இடம் பெற்றார். இதற்கு முன்னதாக பட்சர் 173*, ரண்டால் 174, அதெர்டான் 185*, பில் எட்ரிச் 219 என்று ரன்கள் சேர்த்தனர். பென் ஸ்டோக்ஸ் ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு நம்பிக்கை அதிகமானது. அதற்கேற்ப இங்கிலாந்து வீரர்களும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியாக இங்கிலாந்து தனது 2ஆவது இன்னிங்ஸில் 327 ரன்கள் சேர்த்து 43 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன் மூலமாக 2ஆவது டெஸ்ட் போட்டியிலும் தோல்வி அடைந்தது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக ஆஸ்திரேலியா 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் தற்போது 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

இப்படியொரு வெற்றி தேவையே இல்லை – பேர்ஸ்டோவ் அவுட் சர்ச்சை, பதிலடி கொடுத்த பென் ஸ்டோக்ஸ்!

இந்த நிலையில் ஜானி பேர்ஸ்டோவ் ஆட்டமிழந்தது குறித்து இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: ஸ்ட்ம்பில் இருந்து அதிக தூரத்தில் இருப்பவர் விக்கெட் கீப்பர். அதுவும் ஒரு பேட்ஸ்மேன்,க்ரீஸ் கோட்டிலிருந்து வெளியில் செல்கிறாரா, இல்லையா என்பதை கூர்ந்து கவனித்து பேர்ஸ்டோவை ஆட்டமிழக்கச் செய்த விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரியின் புத்திச்சாலித்தனத்தை வெகுவாக பாராட்டியாக வேண்டும்.

இது நல்ல கிரிக்கெட்டிற்கான அடையாளம் கிடையாது என்றெல்லாம் கூறக் கூடாது என்று அவர் கூறியுள்ளார்.

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

பள்ளி செல்லும் வயதில் சொகுசு கார்.. வைபவ் சூர்யவன்ஷிக்கு டாடாவின் மெகா பரிசு! எந்த கார் தெரியுமா?
IND vs ZIM: இந்தியா பிளேயிங் லெவனில் 'செம' ட்விஸ்ட்.. 3 அதிரடி வீரர்கள் நீக்கம்.. இது லிஸ்ட்லயே இல்லையே!