இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஒரு நாள் போட்டிகளில் 5ஆவது முறையாக 1000 ரன்களை கடந்துள்ளார்.
இந்தியாவின் 13 ஆவடு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் இடம் பெற்ற 10 அணிகளும் 6 போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில், இந்தியா விளையாடிய 6 போட்டிகளிலும் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. 2ஆவது இடத்தில் தென் ஆப்பிரிக்கா, 3ஆவது இடத்தில் நியூசிலாந்து மற்றும் 4ஆவது இடத்தில் ஆஸ்ஹிரேலியா உள்ளன.
இந்த நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியின் போது இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 5ஆவது முறையாக 1000 ரன்களை கடந்துள்ளார். இங்கிலாந்திற்கு எதிரான 29ஆவது லீக் போட்டியில் ரோகித் சர்மா 101 பந்துகளில் 10 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உள்பட 87 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதன் மூலமாக இந்த ஆண்டில் ஒரு நாள் போட்டிகளில் 1000 ரன்களை கடந்துள்ளார்.
குறைந்த இன்னிங்ஸ்களில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தும் முகமது ஷமி!
இதன் மூலமாக ரோகித் சர்மா 5ஆவது முறையாக ஒரு நாள் போட்டிகளில் 1000 ரன்களை கடந்துள்ளார். கடந்த 2013 ஆம் ஆண்டு 1193 ரன்கள் அடித்துள்ளார்.
2017 – 1293 ரன்கள்
2018 – 1030 ரன்கள்
2019 – 1490 ரன்கள்
2023 – 1056 ரன்கள்
மேலும், இந்தப் போட்டியில் 18000 ரன்களையும் கடந்துள்ளார். இந்தப் போட்டியில் 3 சிக்ஸர்கள் விளாசியதன் மூலமாக ஒரு நாள் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் குவித்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் ஜாம்பவான் கிறிஸ் கெயிலின் 56 சிக்ஸர்கள் சாதனையை சமன் செய்துள்ளார். இந்தப் போட்டிக்கு முன்னதாக ஒரு நாள் போட்டிகளில் 53 சிக்ஸர்கள் அடித்திருந்த ரோகித் சர்மா, இந்தப் போட்டியின் மூலமாக 56 சிக்ஸர்கள் அடித்துள்ளார். இதற்கு முன்னதாக 2015ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் வீரர் ஏபிடிவிலியர்ஸ் 58 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.
அதுமட்டுமின்றி 10 பவுண்டரிகள் மூலமாக 100 பவுண்டரிகள் விளாசியுள்ளார். இப்படி ஒரே ஆண்டில், 100 பவுண்டரிகள் மற்றும் 50 சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார். ஒரு கேப்டனாக விளையாடிய 100 போட்டிகளில் அதிக வெற்றிகளை பெற்றுள்ளார். உலகக் கோப்பை கிரிக்கெட்டில் விளையாடிய 6 போட்டிகளிலும் வெற்றி பெற்ற ஒரே கேப்டன் ரோகித் சர்மா மட்டுமே.
5ஆவது இந்திய வீரராக 18000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். ஒட்டுமொத்தமாக 20ஆவது வீரராக 18000 ரன்களை கடந்துள்ளார்.
இந்த ஆண்டில் 1000 ரன்களை கடந்த 6ஆவது இந்திய கேப்டன் என்ற சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்னதாக, சச்சின் டெண்டுல்கர் (1997), முகமது அசாரூதீன் (1998), சவுரவ் கங்குலி (2000, 2002), எம்.எஸ்.தோனி (2008, 2009), விராட் கோலி (2017, 2018, 2019) ஆகியோர் ஒரே ஆண்டில் 1000 ரன்களை கடந்துள்ளனர்.