இலங்கைக்கு எதிரான 30ஆவது லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை இடையிலான 30ஆவது லீக் போட்டி புனே மைதானத்தில் நடந்தது. ஆப்கானிஸ்தான் டாஸ் வென்று பந்து வீசுவதாக அறிவித்தது. அதன்படி, முதலில் விளையாடிய இலங்கை அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில், அதிகபட்சமாக பதும் நிசாங்கா 46 ரன்னிலும், சதீரா சமரவிக்ரமா 36 ரன்னிலும், குசால் மெண்டிஸ் 39 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
இதையடுத்து எளிய இலக்கை துரத்திய ஆப்கானிஸ்தான் அணியில் தொடக்க வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட்டில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரஹ்மத் ஷா மற்றும் இப்ராஹிம் ஜத்ரன் இருவரும் இணைந்து நிதானமாக விளையாடினர். இதில், ஜத்ரன் 39 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ரஹ்மத் ஷா 74 பந்துகளில் 7 பவுண்டரி உள்பட 62 ரன்களில் வெளியேறினார்.
தட்டி தூக்கிய ஃபசல்ஹக் பாரூக்கி – இலங்கை 241 ரன்னுக்கு ஆல் அவுட்!
இதையடுத்து கேப்டன் ஹஷ்மதுல்லா ஷாகிடி மற்றும் அஷ்மதுல்லா உமர்சாய் இருவரும் இணைந்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர். இதில் ஷாகிடி 58 ரன்னும், உமர்சாய் 73 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். ரஷீத் கானின் 100ஆவது ஒரு நாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது.
ஆப்கானிஸ்தான் 45.2 ஓவர்களில் 3 விக்கெட் இழந்து 242 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இதற்கு முன்னதாக இங்கிலாந்தை 69 ரன்கள் வித்தியாசத்திலும், பாகிஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்திலும் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.
Afghanistan vs Sri Lanka: ரஷீத் கானின் 100ஆவது ஒரு நாள் போட்டி – டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பவுலிங்!
இந்த வெற்றியின் மூலமாக ஆப்கானிஸ்தான் புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இலங்கை 6ஆவது இடத்திற்கு சரிந்துள்ளது. இனி வரும் போட்டிகளில் நெதர்லாந்து, ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளை ஆப்கானிஸ்தான் எதிர்கொள்கிறது.
தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வரும் ஹர்திக் பாண்டியா – அரையிறுதியில் களமிறக்க பிசிசிஐ முடிவு?