
இந்தியாவில் 13ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், இந்தியா விளையாடியா 6 போட்டிகளிலும் வெற்றி பெற்று புதிய சாதனை படைத்திருக்கிறது. வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் ஹர்திக் பாண்டியா காயமடைந்த நிலையில், அவருக்குப் பதிலாக நியூசிலாந்திற்கு எதிரான போட்டியில் சூர்யகுமார் யாதவ் மற்றும் பவுலிங்கில் ஷர்துல் தாக்கூர் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக முகமது ஷமி பிளேயிங் 11ல் இடம் பெற்றனர்.
அந்தப் போட்டியில் முகமது ஷமி 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இந்த உலகக் கோப்பையில் பவுலிங் செய்ய வந்த ஷமி தனது முதல் பந்திலேயே விக்கெட் கைப்பற்றி அசத்தினார். இதையடுத்து நடந்த இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதில், 3 போல்டு மற்றும் ஒரு கேட்ச் அடங்கும். மேலும், ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகள் கைப்பற்றி ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றும் வாய்ப்பை நழுவவிட்டார்.
இந்தப் போட்டியில் 4 விக்கெட்டுகள் கைப்பற்றியதன் மூலமாக விளையாடிய 2 போட்டிகளில் மொத்தமாக 9 விக்கெட்டுகள் கைப்பற்றி உலகக் கோப்பை கிரிக்கெட்டில் குறைவான இன்னிங்ஸ்கள் விளையாடி அதிக விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். இதுவரையில் உலகக் கோப்பையில் 13 இன்னிங்ஸ் விளையாடி மொத்தமாக 40 விக்கெட்டுகள் கைப்பற்றி இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகள் கைப்பற்றியவர்களின் பட்டியலில் 3ஆவது இடத்தில் உள்ளார்.
தட்டி தூக்கிய ஃபசல்ஹக் பாரூக்கி – இலங்கை 241 ரன்னுக்கு ஆல் அவுட்!
இதற்கு முன்னதாக ஜவஹல் ஸ்ரீநாத் 33 இன்னிங்ஸ் விளையாடி 44 விக்கெட்டுகளும், ஜாகீர்கான் 23 இன்னிங்ஸ் விளையாடி 44 விக்கெட்டுகளும் கைப்பற்றியுள்ளனர். வரும் 2ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 33ஆவது லீக் போட்டி நடக்க இருக்கிறது.
Afghanistan vs Sri Lanka: ரஷீத் கானின் 100ஆவது ஒரு நாள் போட்டி – டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பவுலிங்!