ஆப்கானிஸ்தானை சிறந்த அணியாக உலகிற்கு காட்டிவிட்டு செல்கிறோம் – ஹஷ்மதுல்லா ஷாகிடி!

By Rsiva kumar  |  First Published Nov 11, 2023, 9:04 AM IST

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 42ஆவது லீக் போட்டியில் தோல்வி அடைந்த பிறகு பேசிய ஆப்கானிஸ்தான் கேப்டன் ஹஷ்மதுல்லா ஷாகிடி, இந்த உலகிற்கு நல்ல செய்தியை சொல்லிவிட்டு ஆப்கானிஸ்தான் அணியை சிறந்த அணியாக காட்டியிருக்கிறோம் என்று கூறியுள்ளார்.


ஆப்கானிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பையின் 42ஆவது லீக் போட்டி நேற்று அகமதாபாத் மைதானத்தில் நடந்தது. கடந்த 2015 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் விளையாடி வரும் ஆப்கானிஸ்தான் ஒரு கத்துக்குட்டி அணியாக காலடி எடுத்து வைத்தது. 2015 உலகக் கோப்பை போட்டியில் விளையாடிய 6 போட்டிகளில் ஒரு வெற்றி மட்டுமே பெற்றது. கடந்த 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் விளையாடிய 9 போட்டிகளிலும் தோல்வி அடைந்து வெளியேறியது. இப்படி விளையாடிய 15 போட்டிகளில் ஒரு வெற்றி மட்டுமே பெற்று எந்த ஒரு அனுபவமே இல்லாமல் உலகக் கோப்பையில் காலடி எடுத்து வைத்த ஆப்கானிஸ்தான், இந்த 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை வீழ்த்தியது.

பும்ரா ஏன் சிறந்த பவுலர் தெரியுமா? 383 பந்துகளில் 268 பந்துகள் ரன்னே கொடுக்கவில்லை!

Tap to resize

Latest Videos

பலம் வாய்ந்த பாகிஸ்தானை வீழ்த்தியது. இலங்கையை சாய்த்தது. நெதர்லாந்தை வீழ்த்தியது. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் வெற்றி பெற வேண்டியது. ஆனால், ஒரேயொரு கேட்ச் வாய்ப்பை நழுவவிட்டு 3 விக்கெட்டுகளில் தோல்வியை தழுவியது. இதே போன்று பலம் வாய்ந்த தென் ஆப்பிரிக்கா அணியை தடுமாறச் செய்தது. நேற்று நடந்த 42ஆவது லீக் போட்டியில் முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் 244 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய தென் ஆப்பிரிக்கா 5 விக்கெட்டுகளை இழந்து 247 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

ஆப்கானிஸ்தான் வெளியேறிவிட்டது; பாகிஸ்தானுக்கு கிடைத்த கடைசி வாய்ப்பு: அரையிறுதிக்கு முன்னேறுமா?

போட்டிக்கு பிறகு பேசிய ஆப்கானிஸ்தான் கேப்டன் கூறியிருப்பதாவது: ஒரு கேப்டனாக நாங்கள் விளையாடிய விதம் மகிழ்ச்சி அளிக்கிறது. ஒவ்வொரு போட்டியிலும் கடைசி நிமிடம் வரையில் போராடினோம். எதிர்காலத்திற்கு தேவையான அனைத்து பாடங்களையும் கற்றுக் கொண்டுள்ளோம். இந்த போட்டியில் எங்கள் பேட்ஸ்மேன்கள் செயல்பட்ட விதம் பெருமையாக உள்ளது. இந்த போட்டிக்கு முன் நாங்கள் சிரமப்பட்டோம். நாங்கள் ஒன்றாக உட்கார்ந்து பலவீனமான புள்ளியைப் பற்றி பேசினோம், எனவே இறுதியில், எங்கள் பேட்ஸ்மேன்கள் எப்படி செய்தார்கள் என்பதை நீங்கள் பார்த்தீர்கள்.

வான் டெர் டுசென், ஆண்டிலேயால் தென் ஆப்பிரிக்கா சிம்பிள் வெற்றி – பரிதாபமாக வெளியேறிய ஆப்கானிஸ்தான்!

இது ஒரு நேர்மறையான விஷயம், எதிர்காலத்தை எதிர்நோக்குகிறோம். எங்களிடம் நல்ல சுழல் பந்து வீச்சாளர்கள் இருக்கிறார்கள். அதே வேகத்தில் நாம் சென்றால், நாம் ஒரு நல்ல பக்கமாக இருப்போம். ஆப்கானிஸ்தானை சிறந்த அணியாக காட்டிவிட்டு செல்கிறோம். இந்த போட்டியில் உலகிற்கு நல்ல செய்தியை வழங்கினோம். நாங்கள் பெரிய அணிகளாக விளையாடி கடைசி வரை போராடினோம். ஆஸ்திரேலிய ஆட்டம், எங்கள் கையில் இருந்தது, ஆனால் அதில் தோற்றது எங்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

CWC 2023 and Diwali: தீபாவளி கொண்டாட்டம்: உலகக் கோப்பைக்காக ஜொலிக்கும் கேட்வே ஆஃப் இந்தியா!

click me!