தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் ஆப்கானிதான் தோல்வி அடைந்து அரையிறுதி வாய்ப்பை இழந்து உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறிவிட்டது.
இந்தியாவில் நடந்து வரும் 13ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது. இதில், இந்தியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 3 அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறிவிட்டன. ஆனால், நியூசிலாந்து மட்டுமே அரையிறுதிக்காக காத்துக் கொண்டிருக்கிறது. அரையிறுதி ரேஸிலிருந்து ஆப்கானிஸ்தான் வெளியேறிய நிலையில், பாகிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேற அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்.
வான் டெர் டுசென், ஆண்டிலேயால் தென் ஆப்பிரிக்கா சிம்பிள் வெற்றி – பரிதாபமாக வெளியேறிய ஆப்கானிஸ்தான்!
பாகிஸ்தான் தன் கடைசி லீக் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் அதிக நெட் ரன் ரேட்டில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. நியூசிலாந்து அணியின் நெட் ரன் ரேட் 0.743 ஆக உள்ளது. பாகிஸ்தானுக்கு நெட் ரன் ரேட் 0.036 ஆக உள்ளது. இந்த நிலையில், தான் இன்று நடக்கும் லீக் போட்டியில் இங்கிலாந்தை 287 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வீழ்த்தினால், நியூசிலாந்து அணியை விட அதிக நெட் ரன் ரேட் பெற வாய்ப்பு உள்ளது.
CWC 2023 and Diwali: தீபாவளி கொண்டாட்டம்: உலகக் கோப்பைக்காக ஜொலிக்கும் கேட்வே ஆஃப் இந்தியா!
வரும் 2025 ஆம் ஆண்டு நடக்க உள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இடம் பெற இங்கிலாந்து புள்ளிப்பட்டியலில் முதல் 7 இடங்களில் இடம் பெற வேண்டும். தற்போது 7ஆவது இடத்தில் இருக்கும் இங்கிலாந்து இன்று நடக்கும் போட்டியில் தோல்வி அடைந்து, மற்றொரு போட்டியில் வங்கதேசம் வெற்றி பெற்றால் புள்ளிப்பட்டியலில் 8ஆவது இடத்திற்கு தள்ளப்படும். அதோடு, சாம்பியன்ஸ் டிராபி வாய்ப்பையும் இழக்க நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
Sri Lanka Cricket Board: இலங்கை கிரிக்கெட் வாரியத்தை சஸ்பெண்ட் செய்து ஐசிசி அதிரடி அறிவிப்பு!