ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான உலகக் கோப்பையின் 42ஆவது லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்கா 247 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 42 ஆவது லீக் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடந்தது. இதில், டாஸ் வென்று முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 244 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக அஸ்மதுல்லா உமர்சான் 97 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
CWC 2023 and Diwali: தீபாவளி கொண்டாட்டம்: உலகக் கோப்பைக்காக ஜொலிக்கும் கேட்வே ஆஃப் இந்தியா!
பின்னர் விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணியில் தொடக்க வீரர் கேப்டன் டெம்பா பவுமா 23 ரன்கள் எடுத்து முஜீப் உர் ரஹ்மான் பந்தில் குர்பாஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து ரஸ்ஸி வான் டெர் டுசென் களமிறங்கி பொறுமையாக விளையாடினார். மற்றொரு புறம் குயீண்டன் டி காக் 41 ரன்கள் சேர்த்த நிலையில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.
Sri Lanka Cricket Board: இலங்கை கிரிக்கெட் வாரியத்தை சஸ்பெண்ட் செய்து ஐசிசி அதிரடி அறிவிப்பு!
அதன் பிறகு வந்த ஐடன் மார்க்ரம் 25 ரன்னிலும், ஹென்ரிச் கிளாசென் 10 ரன்னிலும், டேவிட் மில்லர் 24 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கடைசியாக ரஸ்ஸி வான் டெர் டுசென் மற்றும் ஆண்டிலே பெஹ்லுக்வாயோ இருவரும் இணைந்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். இதில், ஆண்டிலே 39 ரன்களும், ரஸ்ஸி வான் டெர் டுசென் 76 ரன்களும் சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேறிய ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தானுக்கு அடித்த ஜாக்பாட்!
இறுதியாக தென் ஆப்பிரிக்கா 47.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 247 ரன்கள் குவித்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலமாக விளையாடிய 9 போட்டிகளில் 7 வெற்றிகளை பெற்றுள்ளது. ஆப்கானிஸ்தான் இந்தப் போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலமாக 5ஆவது அணியாக உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறியது.