வங்கதேசத்திற்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில் ஆட்டமிழந்த நிலையில் ஆத்திரமடைந்து ஸ்டெம்பை உடைத்த ஹர்மன்ப்ரீத் கவுருக்கு ஆசிய விளையாட்டுப் போட்டியில் விளையாட தடை விதிக்கும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்திய மகளிர் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட ஐசிசி சாம்பியன்ஷிப் தொடரிலும் பங்கேற்றது. ஏற்கனவே நடந்து முடிந்த 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய மகளிர் அணி 2-1 என்ற் கணக்கில் கைப்பற்றியது. இதையடுத்து 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட ஐசிசி சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. இதில், முதல் ஒரு நாள் போட்டியில் வங்கதேச மகளிர் அணி வெற்றி பெற்றது.
2ஆவது ஒரு நாள் போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றது. இறுதியாக தொடரை நிர்ணயிக்கும் 3ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி 22ஆம் தேதி நடந்தது. இதில், வங்கதேச மகளிர் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடியது. அதன்படி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 225 ரன்கள் எடுத்தது.
டெஸ்ட் போட்டியின் கடைசி நாளில் இந்தியா: இனிமேல் 5 மாசத்திற்கு டெஸ்ட் இல்லையா?
பின்னர், எளிய இலக்கை துரத்திய இந்திய மகளிர் அணியின் தொடக்க வீராங்கனை ஷஃபாலி வர்மா 4 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த யாஸ்டிகா பதியா 5 ரன்களில் வெளியேறினார். மற்றொரு தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 59 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் களமிறங்கினார். அவர், நிதானமாக விளையாடிக் கொண்டிருந்தார். 14 ரன்கள் எடுத்திருந்த போது நஹீதா அக்தர் வீசிய பந்தை ஸ்வீப் அடிக்க முயற்சித்தார். ஆனால், பந்து அவரது பேடில் பட்டு அதன் பிறகு அவரது கையில் பட்டு சென்றுள்ளது. லெக் ஸ்லிப்பில் நின்றிருந்த பீல்டர் பந்தை கேட்ச் பிடித்துள்ளார். ஆனால் அதற்குள்ளாக பவுலர் நடுவரிடம் எல்பிடபிள்யூவிற்கு அப்பீல் செய்யவே நடுவரும் சற்றும் யோசிக்காமல் அவுட் கொடுத்துள்ளார்.
விக்கெட் கீப்பராக தோனி சாதனையை முறியடித்து 2ஆவது இடத்திற்கு முன்னேறிய இஷான் கிஷான்!
இதனால், ஆத்திரமடைந்த ஹர்மன்ப்ரீத் கவுர் ஸ்டெம்பை உடைத்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்தப் போட்டியில் இறுதியாக இந்திய மகளிர் அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 225 ரன்கள் எடுக்க போட்டி டை ஆனது. கூடுதலாக ஒரு ரன் எடுத்திருந்தால் இந்திய அணி வெற்றி பெற்றிருக்கும். எனினும், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரை இரு அணிகளும் 1-1 என்று சமன் செய்துள்ளன.
போட்டி முடிந்த பிறகு பேசிய ஹர்மன்ப்ரீத் கவுர், இது போன்ற நடுவர்களால் நாங்கள் மிகவும் ஆச்சரியப்பட்டோம். அடுத்த முறை நாங்கள் வங்கதேசத்திற்கு வரும் போது இது போன்ற நடுவர்களை சமாளிப்பதை உறுதி செய்து அதற்கேற்ப எங்களை தயார்படுத்துவோம் என்று கூறியிருந்தார்.
மழையால் ரத்தான 5 ஆம் நாள்: கடைசியாக டிராவில் முடிந்த 4ஆவது டெஸ்ட்!
எனினும், போட்டி விதிமுறையை மீறியதற்காக ஹர்மன்ப்ரீத் கவுருக்கு போட்டி சம்பளத்திலிருந்து 75 சதவிகிதமும் அபராதம் விதிக்கப்பட்டது. இதில் மைதானத்தில் நடந்த சம்பவத்திற்காக 50 சதவிகிதமும், போட்டி முடிந்த பிறகு நடுவர் குறித்து பேசியதற்காகவும் 25 சதவிகிதமும் என்று மொத்தமாக 75 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டது.
அதுமட்டுமின்றி 4 டிமெரிட் புள்ளிகள் வழங்கப்பட உள்ளது. அவர் களத்தில் நடந்த சம்பவத்திற்காக 3 டீமெரிட் புள்ளிகளையும், பரிசளிப்பு விழாவில் நடுவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டிற்காக 1 டிமெரிட் புள்ளியையும் பெற உள்ளார். ஹர்மன்ப்ரீத் வெளிப்படையாக சில கருத்துக்களை வெளியிட்டதால், போட்டிக்குப் பிறகும் கூட இந்தப் பிரச்சனை முடிவடையவில்லை. போட்டோஷூட் எடுக்கும் போது கூட ஹர்மன்ப்ரீத் கவுர், வங்கதேச அணியின் கேப்டன் நிகர் சுல்தானிடம் நீங்கள் மட்டும் ஏன் இங்கு நிற்கிறீர்கள்?
ACC Mens Emerging Asia Cup 2023 Final: தேசிய கொடியில் மோடின்னு எழுதி காண்பித்த ரசிகர்களால் சர்ச்சை!
நடுவர்கள் உங்களுக்காக போட்டியை சமன் செய்தார்கள். அவர்களை அழைக்கவும்! அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொள்வது நல்லது என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இதனால், வங்கதேச கேப்டன் அங்கிருந்து சென்றதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி தனது அணி வீராங்கனைகளையும் அழைத்துக் கொண்டு டிரெஸிங் ரூமிற்கு சென்றுள்ளார்.
ஐசிசி விதிமுறைகளின்படி, 4 டிமெரிட் புள்ளிகள் 2 இடைநீக்கப் புள்ளிகளாகக் கணக்கிடப்படுகின்றன. 2 சஸ்பென்ஷன் புள்ளிகள் ஒரு டெஸ்ட் மற்றும் இரண்டு T20 அல்லது ஒரு நாள் போட்டிகளுக்குச் சமம். இதனால் இந்தியாவின் அடுத்த இரண்டு ஆட்டங்களில் ஹர்மன்ப்ரீத் விளையாடமாட்டார். இருப்பினும், மகளிர் அணி அடுத்ததாக ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்காக ஹாங்சோவுக்குச் செல்கிறது. எனவே ஹர்மன்ப்ரீத் கவுர் 2023 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் விளையாடுவாரா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
500 விக்கெட்டுகள் கைப்பற்றி புதிய வரலாற்று சாதனை படைத்த அஸ்வின் – ஜடேஜா சுழல் காம்போ!
எனினும், இந்திய கேப்டனுக்கு அதிர்ஷ்டம் வரலாம். ஆசிய விளையாட்டு போட்டிகள் ஐசிசி அதிகார வரம்பிற்குள் வராது, அதனால் அவர் போட்டியில் பங்கேற்கலாம். இருப்பினும் ஐசிசியால் அங்கீகரிக்கப்பட்ட அடுத்த ஆட்டங்களில் அவர் விளையாடமாட்டார். இருப்பினும், மேலே உள்ள எதுவும் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. ஹர்மன்ப்ரீத்தின் நடத்தை மீதான தடைகள் அல்லது அதன் விளைவுகளை ஐசிசி இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.