வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த இஷான் கிஷானுக்கு ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இடம் கிடைக்குமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
இந்திய அணி வெஸ் இண்டீஸிற்கு சென்று அங்கு முதலில் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற நிலையில், தற்போது 2ஆவது டெஸ்ட் போட்டியில் 50 சதவிகித வெற்றி உறுதியாகியுள்ளது. 5ஆம் நாளான இன்றைய போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு 8 விக்கெட்டுகள் தேவை. எனினும், 8 விக்கெட்டுகளை எடுத்து தொடரை கைப்பற்ற இந்திய பவுலர்கள் தீவிரமாக பந்து வீசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஓய்வு முடிவை அறிவித்த 33 வயதான இலங்கை வீரர் லஹிரு திரிமன்னே!
டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் தொடங்குகிறது. முதல் போட்டி வரும் 27 ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இதில், ரோகித் சர்மா, சுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், இஷான் கிஷான், ஹர்திக் பாண்டியா, ஷர்துல் தாக்கூர், ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் படேல், யுஸ்வேந்திர சஹால், குல்தீப் யாதவ், ஜெயதேவ் உனத்கட், முகமது சிராஜ், உம்ரான் மாலிக், முகேஷ் குமார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
பிசிசிஐ மீடியா உரிமைக்கான டெண்டர் நாளை வெளியீடு; டி20, ஒரு நாள் கிரிக்கெட்டுக்கு தனித்தனி டெண்டர்!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் இஷான் கிஷான் மற்றும் சஞ்சு சாம்சன் இருவரும் இடம் பெற்றுள்ள நிலையில் வாய்ப்பு யாருக்கு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சஞ்சு சாம்சன் கடந்த 2022 ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் இடம் பெற்றார். அதன் பிறகு அவர் எந்த தொடரிலும் இடம் பெறவில்லை.
விக்கெட் கீப்பராக தோனி சாதனையை முறியடித்து 2ஆவது இடத்திற்கு முன்னேறிய இஷான் கிஷான்!
மாறாக, ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பான பங்களிப்பை அளித்தார். என்னதான் அணியில் இடம் பெற்றிருந்தாலும் பிளேயிங் 11ல் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு மறுக்கப்படும் என்று தெரிகிறது. ஏற்கனவே வங்கதேச அணிக்கு எதிரான 3ஆவது ஒரு நாள் போட்டியில் இளம் வீரரான இஷான் கிஷான், ரோகித் சர்மாவிற்குப் பதிலாக இடம் பெற்று 210 ரன்கள் குவித்தார். இதில், 21 பவுண்டரியும், 10 சிக்ஸர்களும் அடங்கும்.
500 விக்கெட்டுகள் கைப்பற்றி புதிய வரலாற்று சாதனை படைத்த அஸ்வின் – ஜடேஜா சுழல் காம்போ!
தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் மூலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான இஷான் கிஷான், முதல் டெஸ்டில் ஒரு ரன் மட்டுமே எடுத்தார். 2ஆவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 25 ரன்கள் சேர்த்த அவர் 2ஆவது இன்னிங்ஸில் அதிரடியாக ஆடி 34 பந்துகளில் 52 ரன்கள் குவித்தார். ஆதலால், இஷான் கிஷானுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது.