வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா இடம் பெறுவதற்கு வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் நடந்தது. இதில், இந்தியா 209 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த தோல்வியின் மூலமாக இறுதிப் போட்டியில் 2ஆவது முறையாக இந்தியா தோல்வி அடைந்துள்ளது. இதில் நீண்டகாலமாக இங்கிலாந்தில் பயிற்சியில் இருந்து வந்த சட்டேஷ்வர் புஜாரா மிகவும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்.
முதல் இன்னிங்ஸில் 14 ரன்னிலும், 2ஆவது இன்னிங்ஸில் 27 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன் காரணமாக அவருக்குப் பதிலாக அடுத்து இந்திய அணியின் தேர்வாக ஹர்திக் பாண்டியா கருதப்படுகிறது. வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி இன்னும் ஒரு வாரத்தில் அறிவிக்கப்பட உள்ளது. இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலா 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் வரும் ஜூலை 16 ஆம் தேதி தொடங்கி, 24 ஆம் தேதி முடிவடைகிறது.
MPL 2023: ரூ.14.8 கோடிக்கு வாங்கப்பட்ட ருதுராஜ் கெய்க்வாட்; புனே அணிக்கு கேப்டனாக நியமனம்!
இதையடுத்து, 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் 27 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 1 ஆம் தேதி முடிவடைகிறது. ஆகஸ்ட் 3 ஆம் தேதி டி20 போட்டிகள் கொண்ட தொடர் தொடங்கி 13 ஆம் தேதி முடிவடைகிறது. இதற்கான இந்திய அணி இன்னும் ஒரு வாரத்தில் அறிவிக்கப்படவுள்ளது.
அதிரடியாக ஆடிய பாபா அபராஜித் – சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் 2ஆவது வெற்றி!
இதற்கான இந்திய அணியில் ஹர்திக் பாண்டியாவும் இடம் பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. சிறந்த ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்டியா முதுகு வலி காரணமாக டெஸ்ட் தொடரிலிருந்து விலகினார். கடந்த 2018 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியில் இடம் பெற்று விளையாடியிருந்தார். சிவசுந்தர் தாஸ் தலைமையிலான பிசிசிஐ தேர்வுக் குழு அடுத்த வாரம் கூடும் முன், தேர்வாளர்கள் மற்றும் பிசிசிஐ ஹர்திக் பாண்டியாவை அழைத்து பேச வாய்ப்புள்ளது.
கோயில் வளாகத்தில் கிரிக்கெட் விளையாடிய வெங்கடேஷ் ஐயர்: வைரலாகும் வீடியோ!
டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்கு ஹர்திக் பாண்டியா தன்னை தயார்படுத்திக் கொண்டு வருவதாக கூறப்படுகிறது. ஹர்திக் பாண்டியா வரிசையில் சர்ப்ராஸ் கான், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் இடம் பெறுவதற்கும் வாய்ப்பிருக்கிறது.
நின்னு, நிதானமாக ஆடிய விஜய் சங்கர்; 20 ஓவருக்கு 120 ரன்கள் எடுத்த ஐடீரீம் திருப்பூர் தமிழன்ஸ்!
கேஎஸ் பரத்திற்கு பதிலாக இஷான் கிஷான் இந்திய அணியின் டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விருத்திமான் சகா நியூசிலாந்து தொடரில் இடம் பெறுவார் என்று கூறப்படுகிறது. உமேஷ் யாதவ்விற்குப் பதிலாக முகேஷ் குமார் இடம் பெறுவார் என்று தெரிகிறது.