டி20 உலக கோப்பை: அரையிறுதியில் இங்கிலாந்தின் பிரத்யேக திட்டத்தை சிதைத்த ஹர்திக் பாண்டியா..!

By karthikeyan VFirst Published Nov 10, 2022, 4:01 PM IST
Highlights

டி20 உலக கோப்பை அரையிறுதியில் இந்தியாவுக்கு எதிராக மார்க் உட்டை உட்காரவைத்துவிட்டு, டெத் ஓவரில் ஸ்லோ மற்றும் அவுட்சைட் யார்க்கர் வீசி ரன்னை கட்டுப்படுத்துவார் என்ற நம்பிக்கையில் கிறிஸ் ஜோர்டானை அணிக்குள் கொண்டுவந்தது. ஆனால் கிறிஸ் ஜோர்டானின் பவுலிங்கை அடித்து நொறுக்கி இங்கிலாந்தின் திட்டத்தையே சிதைத்தார் ஹர்திக் பாண்டியா.
 

டி20 உலக கோப்பை தொடரின் முதல் அரையிறுதியில் நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் ஃபைனலுக்கு முன்னேறிவிட்ட நிலையில், அடிலெய்டில் நடந்துவரும் 2வது அரையிறுதி போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் ஆடிவருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

இந்த போட்டிக்கான இங்கிலாந்து அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டன. காயத்தால் விலகிய டேவிட் மலானுக்கு பதிலாக ஃபிலிப் சால்ட் ஆடுகிறார். இந்த உலக கோப்பையில் 150 கிமீ வேகத்திற்கு மேல் வீசி எதிரணி பேட்ஸ்மேன்களை மிரட்டியதுடன் விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்திய மார்க் உட்டை உட்காரவைத்துவிட்டு கிறிஸ் ஜோர்டானை ஆடவைத்தது இங்கிலாந்து அணி.

ஐபிஎல் 2023: கொச்சியில் ஐபிஎல் ஏலம்..! கூடுதல் தொகையால் குதூகலத்தில் ஐபிஎல் அணிகள்

கிறிஸ் ஜோர்டான் நல்ல வேரியேஷனில் வீசக்கூடியவர் என்பதால் டெத் ஓவரில் ரன்களை கட்டுப்படுத்துவார் என்ற எண்ணத்தில் அவரை ஆடவைத்தனர். ஆனால் இங்கிலாந்து செய்த ஒரு மாற்றத்திற்கான நோக்கத்தை சிதைக்கும் வகையில், கிறிஸ் ஜோர்டானின் பவுலிங்கை அடித்து நொறுக்கினார் ஹர்திக் பாண்டியா.

முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா(28 பந்தில் 27 ரன்கள்) மற்றும் கேஎல் ராகுல் (5) ஆகிய இருவரும் ஏமாற்றமளிக்க, சூர்யகுமார் யாதவும் 14 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இந்த உலக கோப்பையில் நல்ல ஃபார்மில் அபாரமாக ஆடிவரும் விராட் கோலி இந்த போட்டியிலும் பொறுப்புடன் பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். 40 பந்தில் 50 ரன்கள் அடித்தார்.

சானியா மிர்சாவை ஏமாற்றிய ஷோயப் மாலிக்.. அதிகாரப்பூர்வமாக விவாகரத்து..?

டெத் ஓவரில் ஜோர்டான் ரன்னை கட்டுப்படுத்துவார் என்ற நோக்கில் தான் எடுக்கப்பட்டார். ஆனால் அவர் வீசிய 18வது ஓவரில் 2 சிக்ஸர்களை விளாசிய ஹர்திக் பாண்டியா, அவர் வீசிய கடைசி ஓவரில் ஒரு சிக்ஸர் மற்றும் பவுண்டரி அடித்து சிறப்பாக முடித்து கொடுத்தார். ஜோர்டான் பவுலிங்கில் 3 சிக்ஸர்கள் விளாசினார் பாண்டியா. 33 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 63 ரன்களை குவித்த பாண்டியா, அடித்த 5 சிக்ஸர்களில் 3 சிக்ஸர்களை ஜோர்டான் பவுலிங்கில் அடித்தார்.
 

click me!