T20 WC: அரையிறுதியில் கோலி - ஹர்திக் பாண்டியா அதிரடி அரைசதம்! இங்கி.,க்கு சவாலான இலக்கை நிர்ணயித்த இந்தியா

By karthikeyan V  |  First Published Nov 10, 2022, 3:19 PM IST

டி20 உலக கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, விராட் கோலி மற்றும் ஹர்திக் பாண்டியாவின் அதிரடி அரைசதத்தால் 20 ஓவரில் 168 ரன்களை குவித்த இந்திய அணி, 169 ரன்கள் என்ற இலக்கை இங்கிலாந்துக்கு நிர்ணயித்துள்ளது.
 


டி20 உலக கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி ஃபைனலுக்கு முன்னேறியது. 

அடிலெய்டில் இன்று நடந்துவரும் 2வது அரையிறுதி போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் ஆடிவருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். இங்கிலாந்து அணியில் காயத்தால் விலகிய டேவிட் மலானுக்கு பதிலாக ஃபிலிப் சால்ட் ஆடுகிறார். ஃபாஸ்ட் பவுலர் மார்க் உட்டுக்கு பதிலாக கிறிஸ் ஜோர்டான் ஆடுகிறார்.

Tap to resize

Latest Videos

undefined

ஐபிஎல் 2023: கொச்சியில் ஐபிஎல் ஏலம்..! கூடுதல் தொகையால் குதூகலத்தில் ஐபிஎல் அணிகள்

இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, அக்ஸர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங்.

இங்கிலாந்து அணி:

ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர், கேப்டன்), அலெக்ஸ் ஹேல்ஸ், ஃபிலிப் சால்ட், பென் ஸ்டோக்ஸ், ஹாரி ப்ரூக், லியாம் லிவிங்ஸ்டோன், மொயின் அலி, சாம் கரன், கிறிஸ் ஜோர்டான், கிறிஸ் வோக்ஸ், அடில் ரஷீத்.

முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர் கேஎல் ராகுல் 5 ரன்னுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். கேப்டன் ரோஹித் சர்மா 28 பந்தில் 27 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். சூர்யகுமார் யாதவும் 14 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஆனால் இந்த உலக கோப்பையில் செம ஃபார்மில் சிறப்பாக ஆடிவரும் விராட் கோலி, சூப்பர் 12 சுற்றில் 3 அரைசதங்கள் அடித்த நிலையில், இந்த போட்டியிலும் பொறுப்பாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார்.

அரைசதம் அடித்த கோலி 50 ரன்களுக்கு கிறிஸ் ஜோர்டானின் பந்தில் அடில் ரஷீத்திடம் கேட்ச் கொடுத்து 18வது ஓவரின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். கோலியுடன் இணைந்து அடித்து ஆடிய ஹர்திக் பாண்டியா, கோலி ஆட்டமிழந்த பின்னரும் அதிரடியை தொடர்ந்தார். சாம் கரன் வீசிய 19வது ஓவரில் ஹர்திக் பாண்டியா ஒரு சிக்ஸர் மற்றும் 2 பவுண்டரிகள் அடித்து அரைசதத்தை பூர்த்தி செய்தார். அந்த ஓவரில் ரிஷப் பண்ட்டும் ஒரு பவுண்டரி அடிக்க, 19வது ஓவரில் இந்திய அணிக்கு 20 ரன்கள் கிடைத்தது.

T20 WC: பாபர் அசாம் - ரிஸ்வான் அரைசதம்.. அரையிறுதியில் நியூசிலாந்தை வீழ்த்தி ஃபைனலுக்கு முன்னேறியது பாகிஸ்தான்

கடைசி ஓவரில் ஹர்திக் பாண்டியா ஒரு சிக்ஸரும் பவுண்டரியும் அடிக்க, 20 ஓவரில் 168 ரன்களை குவித்து, 169 ரன்கள் என்ற சவாலான இலக்கை இங்கிலாந்துக்கு நிர்ணயித்துள்ளது. விராட் கோலி 40 பந்தில் 50 ரன்களும், ஹர்திக் பாண்டியா 33 பந்தில் 63 ரன்களும் குவித்தனர்.
 

click me!