இந்திய அணி உலக கோப்பை ஜெயிக்காததற்கு என்ன காரணம்..? புட்டுப்புட்டு வைத்த ஹர்பஜன் சிங்

Published : Feb 27, 2023, 02:59 PM ISTUpdated : Feb 27, 2023, 03:03 PM IST
இந்திய அணி உலக கோப்பை ஜெயிக்காததற்கு என்ன காரணம்..? புட்டுப்புட்டு வைத்த ஹர்பஜன் சிங்

சுருக்கம்

இந்திய அணி கடந்த 10 ஆண்டுகளாக ஐசிசி கோப்பையை ஜெயிக்க முடியாததற்கான காரணம் குறித்து முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கருத்து கூறியுள்ளார்.  

இந்திய அணி 2013ம் ஆண்டுக்கு பிறகு ஐசிசி கோப்பையை ஜெயித்ததே இல்லை. 2011ல் ஒருநாள் உலக கோப்பையை வென்ற இந்திய அணி, 2013ல் சாம்பியன்ஸ் டிராபியை வென்றது. அதன்பின்னர் 2014 டி20 உலக கோப்பை, 2017 சாம்பியன்ஸ் டிராபி தொடர்களில் ஃபைனல் வரை சென்று கோப்பையை இழந்தது.

2019 ஒருநாள் உலக கோப்பையில் அரையிறுதியில் நியூசிலாந்திடம் தோற்று தொடரை விட்டு வெளியேறிய இந்திய அணி, ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலிலும் நியூசிலாந்திடம் தோற்று கோப்பையை இழந்தது. 

2021 மற்றும் 2022ம் ஆண்டுகளில் நடந்த டி20 உலக கோப்பையை இந்திய அணி வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த தொடர்களிலும் தோற்று இந்திய அணி ஏமாற்றமளித்தது. 2022 டி20 உலக கோப்பை அரையிறுதியில் இங்கிலாந்திடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்து அதிருப்தியளித்தது.

சதமடித்து நம்பர் 1 இடத்தை பிடித்த கேன் வில்லியம்சன்..! டெஸ்ட் கிரிக்கெட்டில் அபாரமான சாதனை

இந்திய அணி ஐசிசி கோப்பையை வென்று 10 ஆண்டுகள் ஆகிவிட்டதால், ஒரு உலக கோப்பையை வெல்ல வேண்டியது அவசியம்.  இந்த ஆண்டு இந்தியாவில் நடக்கும் ஒருநாள் உலக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ள இந்திய அணி அதற்காக தீவிரமாக தயாராகிவருகிறது. 

இந்நிலையில், இந்திய அணியால் ஏன் கடந்த 10 ஆண்டுகளாக ஒரு ஐசிசி டிராபியை கூட ஜெயிக்க முடியவில்லை, அதற்கு என்ன காரணம், ஜெயிக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து 2011 உலக கோப்பை வின்னிங் அணியின் முக்கியமான வீரரான ஹர்பஜன் சிங் கருத்து கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய ஹர்பஜன் சிங், 2018-2019ல் வீரர்களை தொடர்ந்து மாற்றிக்கொண்டே இருந்தார்கள். தினேஷ் கார்த்திக் ஆடினார்; ரிஷப் பண்ட் ஆடினார். இதுமாதிரி பல மாற்றங்கள் செய்யப்பட்டுக்கொண்டே இருந்தது. பெரிய மற்றும் முக்கியமான நாக் அவுட் போட்டிகளில் ஜெயிக்க அனுபவம் தேவை. பெரிய போட்டிகளில் அழுத்தமும் அதிகமாக இருக்கும். உலக கோப்பை அழுத்தம் வித்தியாசமானது. உலக கோப்பை நாக் அவுட் போட்டிகள் அழுத்தம் வேற லெவலில் இருக்கும். அதை சமாளிக்கும் அளவிற்கான அனுபவம் வாய்ந்த வீரர்கள் வேண்டும். மிகக்குறைவான வீரர்களே அந்த அழுத்தத்தை சிறப்பாக கையாண்டு ஆடக்கூடிய வீரர்கள்.

ஐபிஎல்லில் இருந்து விலகும் பும்ரா..? மும்பை இந்தியன்ஸுக்கு மரண அடி

ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் ஸ்கோர் செய்தால் இந்திய அணி ஜெயிக்கும் என்று கூறிக்கொண்டிருந்தோம். இப்போது ஹர்திக் பாண்டியா வளர்ந்துவிட்டார். நம் அணியில் நிறைய மேட்ச் வின்னர்கள் இருக்கிறார்கள். தனி நபராக போட்டியை ஜெயித்து கொடுக்கும் மேட்ச் வின்னர்கள் அதிகமாக இருக்கிறார்கள். நம்மிடம் இருக்கும் திறமைக்கு, நாம் உலக கோப்பையை ஜெயிக்கவில்லை என்றால் வேறு யார் ஜெயிக்க முடியும். இந்தளவிற்கு திறமையான வீரர்களை வைத்துக்கொண்டு உலக கோப்பையை இப்போது ஜெயிக்கவில்லை என்றால், எப்போது ஜெயிக்க போகிறீர்கள் என்று ஹர்பஜன் சிங் காட்டமாக சாடியுள்ளார்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA 2nd T20: சுப்மன் கில், சூர்யகுமார் படுமோசம்..! இந்தியாவை ஊதித்தள்ளிய தென்னாப்பிரிக்கா!
டி20 உலகக்கோப்பை டிக்கெட் வெறும் 100 ரூபாய் தான்! எப்படி புக் செய்வது? முழு விவரம் இதோ!