
தென்னாப்பிரிக்காவில் நடந்த மகளிர் டி20 உலக கோப்பையில் ஆஸ்திரேலிய அணி 6வது முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்தது.
ஃபைனலில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய மகளிர் அணி, பெத் மூனியின் பொறுப்பான அரைசதத்தால்(74 ரன்கள்) 20 ஓவரில் 156 ரன்கள் அடித்த ஆஸ்திரேலிய அணி, 137 ரன்களுக்கு தென்னாப்பிரிக்காவை சுருட்டி 19 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 6வது முறையாக டி20 உலக கோப்பையை வென்றது.
சென்னை ஏர்போர்ட் அதிகாரிகள் என் மீது காட்டிய அன்பு, அக்கறையை மறக்கவேமாட்டேன்! வாசிம் அக்ரம் உருக்கம்
ஆஸ்திரேலிய மகளிர் அணியின் கேப்டன் மெக் லானிங்கின் கேப்டன்சியில் அந்த அணி ஹாட்ரிக் டி20 உலக கோப்பையை வென்றுள்ளது. மெக் லானிங் 5வது ஐசிசி கோப்பையை ஆஸ்திரேலிய அணிக்கு வென்று கொடுத்து சாதனை படைத்துள்ளார்.
ஆஸ்திரேலிய மகளிர் அணியின் கேப்டன் மெக் லானிங்கின் கேப்டன்சியில் முதல் முறையாக 2014ல் ஒருநாள் உலக கோப்பையை வென்றது. 2022ம் ஆண்டு ஒருநாள் உலக கோப்பையையும் மெக் லானிங் ஆஸ்திரேலிய அணிக்கு வென்று கொடுத்தார்.
2018, 2020 மற்றும் 2023ம் ஆண்டுகளில் டி20 உலக கோப்பையை ஆஸ்திரேலிய அணிக்கு தொடர்ச்சியாக 3வது முறையாக டி20 உலக கோப்பையை வென்று கொடுத்துள்ளார் மெக் லானிங். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணிக்கு மொத்தமாக 5 ஐசிசி டிராபிகளை வென்று கொடுத்து, ரிக்கி பாண்டிங் மற்றும் தோனியின் சாதனைகளை முறியடித்துள்ளார்.
மகளிர் டி20 உலக கோப்பையை 6வது முறையாக வென்று ஆஸ்திரேலியா சாதனை..!
அதிக ஐசிசி டிராபியை வென்ற கேப்டன் என்ற சாதனையை படைத்து அசத்தியுள்ளார் மெக் லானிங்.