PAK vs ENG: அம்பயரை பதம்பார்த்த ஹைதர் அலியின் ஷாட்..! வைரல் வீடியோ

Published : Oct 01, 2022, 06:02 PM IST
PAK vs ENG: அம்பயரை பதம்பார்த்த ஹைதர் அலியின் ஷாட்..! வைரல் வீடியோ

சுருக்கம்

இங்கிலாந்துக்கு எதிரான 6வது டி20 போட்டியில் பாகிஸ்தான் பேட்ஸ்மேன் ஹைதர் அலி அடித்த ஷாட் லெக் அம்பயர் அலீம் தர்-ஐ பதம்பார்த்த வீடியோ வைரலாகிவருகிறது.  

பாகிஸ்தான் - இங்கிலாந்து இடையேயான டி20 தொடர் நடந்துவருகிறது. 7 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் 6 போட்டிகளில் இரு அணிகளும் தலா 3 வெற்றிகளை பெற்றதால் தொடர் 3-3 என சமனில் உள்ளது. தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி டி20 போட்டி நாளை(அக்டோபர் 2) லாகூரில் நடக்கிறது.

பாகிஸ்தான் - இங்கிலாந்து இடையேயான 6வது டி20 போட்டி நேற்று நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி, பாபர் அசாமின் அதிரடி அரைசதத்தால் 20 ஓவரில் 169 ரன்கள் அடித்தது. பாபர் அசாம் 59 பந்தில் 87 ரன்கள் அடித்தார்.

இதையும் படிங்க - டி20 உலக கோப்பையில் பும்ரா ஆட வாய்ப்பு..! பிசிசிஐ தலைவர் கங்குலி தகவல்

170 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணி, தொடக்க வீரர் ஃபிலிப் சால்ட்டின் அதிரடி அரைசதத்தால் 15வது ஓவரிலேயே இலக்கை அடித்து அபார வெற்றி பெற்றது. ஃபிலிப் சால்ட் 41 பந்தில் 88 ரன்களை குவித்து கடைசிவரை களத்தில் நின்று போட்டியை முடித்து கொடுத்தார்.

இந்த போட்டியில் பாகிஸ்தான் பேட்டிங்கின்போது 6வது ஓவரின் 5வது பந்தில் ஹைதர் அலி லெக் திசையில் அடித்த பந்து லெக் அம்பயர் அலீம் தர்-ஐ தாக்கியது. ஷார்ட் பிட்ச் பந்தை லெக் திசையில் ஓங்கி புல் ஷாட் அடித்தார் ஹைதர் அலி. அந்த பந்து தன்னை நோக்கி வந்ததால் பதற்றமடைந்தார் அம்பயர் அலீம் தர்.

இதையும் படிங்க -  டி20 உலக கோப்பையில் பும்ராவுக்கு நிகரான மற்றும் சரியான மாற்று வீரர் அவர்தான்..! வேற யாரும் சரியா வரமாட்டாங்க

பந்து தனக்கு நேராக வருவதை அறிந்து விலக முயன்றார் அம்பயர். ஆனால் அவர் விலகுவதற்குள்ளாக வேகமாக வந்து அம்பயர் அலீம் தர்-ன் தொடையை தாக்கியது. நல்லவேளையாக வேறெங்கும் அடிபடாமல் தொடையில் பட்டது. அதனால் எளிதாக தேய்த்துவிட்டு கடந்துசென்றார் அம்பயர் அலீம் தர். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
 

PREV
click me!

Recommended Stories

யார்க்கர் மன்னன் ஜஸ்பிரித் பும்ரா வரலாற்று சாதனை..! மற்ற பவுலர்கள் நினைச்சு கூட பார்க்க முடியாது!
IND VS SA 1st T20: தென்னாப்பிரிக்காவை வெறும் 74 ரன்னில் சுருட்டி வீசிய இந்தியா.. மெகா வெற்றி!