நசீம் ஷாவை தொடர்ந்து மற்றொரு பாகிஸ்தான் வீரரும் மருத்துவமனையில் அனுமதி

By karthikeyan VFirst Published Oct 1, 2022, 5:26 PM IST
Highlights

நசீம் ஷாவை தொடர்ந்து பாகிஸ்தான் அணியின் மற்றொரு வீரரான ஹைதர் அலியும் வைரல் தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 

டி20 உலக கோப்பை தொடர் வரும் 16ம் தேதி முதல் நவம்பர் 13 வரை ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ளது. அதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவரும் நிலையில், பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் தீவிரமாக தயாராகிவருகிறது.

பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் வலுவாக உள்ளது. அந்த அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங் மட்டும்தான் பிரச்னையாக உள்ளது. முகமது ரிஸ்வானின் டாப் ஃபார்ம், ஷாஹீன் அஃப்ரிடி காயத்திலிருந்து மீண்டு ஃபிட்னெஸ் பெற்றது, பாபர் அசாமின் ஃபார்ம், ஃபாஸ்ட் பவுலர்களின் மிரட்டலான வேகம் ஆகியவை பாகிஸ்தானுக்கு பலம் சேர்க்கிறது.

இதையும் படிங்க - டி20 உலக கோப்பையில் பும்ரா ஆட வாய்ப்பு..! பிசிசிஐ தலைவர் கங்குலி தகவல்

டி20 உலக கோப்பைக்கு முன்பாக  இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர் பாகிஸ்தான் அணிக்கு நல்ல பயிற்சியாக அமைந்துள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் பாகிஸ்தான் அணி ஆடிவரும் நிலையில், பாகிஸ்தான் வீரர்கள் வைரல் தொற்றால் அடுத்தடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது பாகிஸ்தான் அணிக்கு கவலையளிக்கிறது.

பாகிஸ்தான் அணியின் ஃபாஸ்ட் பவுலர் நசீம் ஷா வைரல் தொற்றால் கடந்த சில தினங்களுக்கு முன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நிலையில், இப்போது ஹைதர் அலியும் வைரல் தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க - பும்ராவின் காயத்திற்கு ரோஹித் மற்றும் டிராவிட் தான் காரணம்..?

இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் பாகிஸ்தான் அணியின் மிடில் ஆர்டர் வீரராக ஆடிவரும் ஹைதர் அலி இந்த தொடரில் சரியாக ஆடவில்லை. அவர் சோபிக்காமல் இருந்துவந்த நிலையில், வைரல் தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 

click me!