டி20 கிரிக்கெட்டில் விராட் கோலியின் சாதனையை சமன் செய்தார் பாபர் அசாம்..! தரமான சாதனை

By karthikeyan VFirst Published Oct 1, 2022, 4:46 PM IST
Highlights

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் விராட் கோலியின் சாதனையை சமன் செய்துள்ளார் பாபர் அசாம்.
 

சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக பாபர் அசாமும் வளர்ந்துள்ளார் பாபர் அசாம். விராட் கோலி, கேன் வில்லியம்சன், ஜோ ரூட், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் வரிசையில் பாபர் அசாமும் இணைந்துள்ளார்.

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவருகிறார் பாபர் அசாம். பழைய பேட்டிங்  சாதனைகளை தகர்த்து புதிய மைல்கற்களை எட்டிவருகிறார். ஆசிய கோப்பையில் சரியாக ஆடாத பாபர் அசாம், இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் 2 நல்ல இன்னிங்ஸ்களை ஆடினார். முதல் 5 போட்டிகளில் ஒரு போட்டியில் அபாரமாக ஆடி சதமடித்தார் பாபர் அசாம்.

இதையும் படிங்க - டி20 உலக கோப்பையில் பும்ராவுக்கு நிகரான மற்றும் சரியான மாற்று வீரர் அவர்தான்..! வேற யாரும் சரியா வரமாட்டாங்க

அதைத்தவிர 4 போட்டிகளில் சரியாக ஆடவில்லை. டி20 உலக கோப்பை நெருங்கிவரும் நிலையில் பாபர்  அசாம் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தாதது பாகிஸ்தான் அணிக்கு கவலையளித்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான 6வது டி20 போட்டியில் சிறப்பாக பேட்டிங் ஆடிய 59 பந்தில் 87 ரன்களை குவித்தார். இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 3000 ரன்கள் என்ற மைல்கல்லையும் எட்டினார்.

81வது சர்வதேச டி20 இன்னிங்ஸில் 3000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார் பாபர் அசாம். இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் விரைவில் 3000 ரன்களை எட்டிய வீரர் என்ற சாதனையை விராட் கோலியுடன் பகிர்ந்துள்ளார். விராட் கோலியும் 81 இன்னிங்ஸ்களில் தான் 3000 ரன்களை எட்டினார். மேலும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 100 இன்னிங்ஸ்களுக்கு குறைவாகவே 3000 ரன்களை எட்டிய 2வது வீரர் என்ற சாதனையை படைத்தார். கோலியும் பாபர் அசாமும் மட்டுமே 100 டி20 இன்னிங்ஸ்களுக்குள்ளாக 3000 ரன்களை அடித்தனர்.

இதையும் படிங்க - டி20 உலக கோப்பையில் பும்ரா ஆட வாய்ப்பு..! பிசிசிஐ தலைவர் கங்குலி தகவல்

மேலும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 3000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டிய 5வது வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். விராட் கோலி, ரோஹித் சர்மா, மார்டின் கப்டில் மற்றும் பால் ஸ்டர்லிங் ஆகியோருக்கு அடுத்து 3000 ரன்கள் என்ற மைல்கல்லை சர்வதேச டி20 கிரிக்கெட்டில் எட்டிய வீரர் பாபர் அசாம் ஆவார்.
 

click me!