PAK vs ENG: ஃபிலிப் சால்ட் மேட்ச் வின்னிங் பேட்டிங்.. 15வது ஓவரிலேயே இலக்கை அடித்து இங்கிலாந்து அபார வெற்றி

Published : Oct 01, 2022, 02:26 PM IST
PAK vs ENG: ஃபிலிப் சால்ட் மேட்ச் வின்னிங் பேட்டிங்.. 15வது ஓவரிலேயே இலக்கை அடித்து இங்கிலாந்து அபார வெற்றி

சுருக்கம்

ஃபிலிப் சால்ட்டின் அதிரடி அரைசதத்தால் பாகிஸ்தான் நிர்ணயித்த 170 ரன்கள் என்ற சவாலான இலக்கை 15வது ஓவரிலேயே அடித்து இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.   

இங்கிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 7 டி20 போட்டிகள் கொண்ட தொடரில்  ஆடிவருகிறது. 5 போட்டிகளின் முடிவில் பாகிஸ்தான் அணி 3-2 என முன்னிலை வகித்த நிலையில், 6வது  டி20 போட்டி லாகூரில் நடந்தது. 

லாகூரில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் மொயின் அலி ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

இங்கிலாந்து அணி:

ஃபிலிப் சால்ட் (விக்கெட் கீப்பர்), அலெக்ஸ் ஹேல்ஸ், டேவிட் மலான், பென் டக்கெட், ஹாரி ப்ரூக், மொயின் அலி (கேப்டன்), சாம் கரன், டேவிட் வில்லி, அடில் ரஷீத், ரீஸ் டாப்ளி, ரிச்சர்ட் க்ளீசன்.

இதையும் படிங்க - பும்ராவின் காயத்திற்கு ரோஹித் மற்றும் டிராவிட் தான் காரணம்..?

பாகிஸ்தான் அணி:

பாபர் அசாம் (கேப்டன்), முகமது ஹாரிஸ் (விக்கெட் கீப்பர்), ஷான் மசூத், இஃப்டிகார் அகமது, ஹைதர் அலி, ஷதாப் கான், ஆசிஃப் அலி, முகமது நவாஸ், ஆமீர் ஜமால், முகமது வாசிம், ஷாநவாஸ் தஹானி.

இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியில் ரிஸ்வான் ஆடாததால் அறிமுக வீரர் முகமது ஹாரிஸ், பாபர் அசாமுடன் தொடக்க வீரராக களமிறங்கினார். அறிமுக போட்டியில் ஹாரிஸ் 7 ரன்களுக்கும், ஷான் மசூத் ரன்னே அடிக்காமலும் ஆட்டமிழந்தனர். ஹைதர் அலி 18 ரன்களும், இஃப்டிகார் அகமது 31 ரன்களும் அடித்தனர்.  ஆசிஃப் அலி 9 ரன்கள் மட்டுமே அடித்தார்.

ஒருமுனையில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழ, மறுமுனையில் நிலைத்து நின்று அடித்து ஆடிய கேப்டன் பாபர் அசாம் அரைசதம் அடித்தார். தொடக்கம் முதலே பொறுப்புடன் ஆடிய பாபர் அசாம் அரைசதம் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். 59 பந்தில் 7 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 87 ரன்களை குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார் பாபர் அசாம். 20 ஓவரில் 169 ரன்கள் அடித்தது பாகிஸ்தான்.

170 ரன்கள் என்ற சவாலான இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஃபிலிப் சால்ட் தொடக்கம் முதலே பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி பாகிஸ்தான் பவுலிங்கை அடித்து நொறுக்க, 7வது ஓவரிலேயே 100 ரன்களை எட்டியது இங்கிலாந்து அணி. அலெக்ஸ் ஹேல்ஸ் 12 பந்தில் 27 ரன்களும், டேவிட் மலான் 18 பந்தில் 26 ரன்களும் அடித்து ஆட்டமிழந்தனர்.

இதையும் படிங்க - டி20 உலக கோப்பையில் பும்ராவுக்கு நிகரான மற்றும் சரியான மாற்று வீரர் அவர்தான்..! வேற யாரும் சரியா வரமாட்டாங்க

தொடக்கம் முதலே அடித்து ஆடி அரைசதம் அடித்த ஃபிலிப் சால்ட், 41 பந்தில் 13 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 88 ரன்களை குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்று போட்டியை முடித்து கொடுத்தார். ஃபிலிப் சால்ட்டின் அபாரமான பேட்டிங்கால் 170 ரன்கள் என்ற இலக்கை 15வது ஓவரிலேயே அடித்து இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

இதையடுத்து 3-3 என டி20 தொடர் சமனடைந்தது. தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி டி20 போட்டி அக்டோபர் 2ம் தேதி லாகூரில் நடக்கிறது. 
 

PREV
click me!

Recommended Stories

Abhishek Sharma: ஆத்தாடி! என்னா அடி! சிக்சர் மழை.. வெறும் 30 பந்தில் சதம்.. அபிஷேக் சர்மா உலக சாதனை!
India Vs West Indies: ரோஹித், கோலி ரிட்டர்ன்ஸ்! 6 பேருக்கு கல்தா; அகர்கர் போட்ட அதிரடி