PAK vs ENG: 6வது டி20யில் பாபர் அசாம் அதிரடி அரைசதம்.. இங்கிலாந்துக்கு சவாலான இலக்கை நிர்ணயித்த பாகிஸ்தான்

By karthikeyan VFirst Published Sep 30, 2022, 10:01 PM IST
Highlights

இங்கிலாந்துக்கு எதிரான 6வது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 169 ரன்களை குவித்து 170 ரன்கள் என்ற சவாலான இலக்கை இங்கிலாந்துக்கு நிர்ணயித்துள்ளது.
 

இங்கிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 7 டி20 போட்டிகள் கொண்ட தொடரில்  ஆடிவருகிறது. 5 போட்டிகளின் முடிவில் பாகிஸ்தான் அணி 3-2 என முன்னிலை வகிக்கும் நிலையில், 6வது  டி20 போட்டி இன்று லாகூரில் நடந்துவருகிறது. 

இந்த போட்டியில் ஜெயித்து தொடரை வெல்லும் முனைப்பில் பாகிஸ்தான் அணியும், தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைக்க இந்த போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் இங்கிலாந்து அணியும் ஆடிவருகின்றன. லாகூரில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

இங்கிலாந்து அணி:

ஃபிலிப் சால்ட் (விக்கெட் கீப்பர்), அலெக்ஸ் ஹேல்ஸ், டேவிட் மலான், பென் டக்கெட், ஹாரி ப்ரூக், மொயின் அலி (கேப்டன்), சாம் கரன், டேவிட் வில்லி, அடில் ரஷீத், ரீஸ் டாப்ளி, ரிச்சர்ட் க்ளீசன்.

இதையும் படிங்க - பும்ராவின் காயத்திற்கு ரோஹித் மற்றும் டிராவிட் தான் காரணம்..?

பாகிஸ்தான் அணி:

பாபர் அசாம் (கேப்டன்), முகமது ஹாரிஸ் (விக்கெட் கீப்பர்), ஷான் மசூத், இஃப்டிகார் அகமது, ஹைதர் அலி, ஷதாப் கான், ஆசிஃப் அலி, முகமது நவாஸ், ஆமீர் ஜமால், முகமது வாசிம், ஷாநவாஸ் தஹானி.

இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியில் ரிஸ்வான் ஆடாததால் அறிமுக வீரர் முகமது ஹாரிஸ், பாபர் அசாமுடன் தொடக்க வீரராக களமிறங்கினர். அறிமுக போட்டியில் ஹாரிஸ் 7 ரன்களுக்கும், ஷான் மசூத் ரன்னே அடிக்காமலும் ஆட்டமிழந்தனர். ஹைதர் அலி 18 ரன்களும், இஃப்டிகார் அகமது 31 ரன்களும் அடித்தனர்.  ஆசிஃப் அலி 9 ரன்கள் மட்டுமே அடித்தார்.

ஒருமுனையில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழ, மறுமுனையில் நிலைத்து நின்று அடித்து ஆடிய கேப்டன் பாபர் அசாம் அரைசதம் அடித்தார். தொடக்கம் முதலே பொறுப்புடன் ஆடிய பாபர் அசாம் அரைசதம் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். 59 பந்தில் 7 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 87 ரன்களை குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார் பாபர் அசாம்.

இதையும் படிங்க - டி20 உலக கோப்பையில் பும்ராவுக்கு நிகரான மற்றும் சரியான மாற்று வீரர் அவர்தான்..! வேற யாரும் சரியா வரமாட்டாங்க

பாபர் அசாம் சரியாக ஸ்கோர் செய்யாமல் இருந்துவந்தது, டி20 உலக கோப்பைக்கு முன் பாகிஸ்தான் அணிக்கு கவலையளித்த நிலையில், இன்றைய போட்டியில் அவர் அபாரமாக பேட்டிங் ஆடியது பாகிஸ்தான் அணிக்கும் ரசிகர்களுக்கும் உற்சாகமளித்தது.
 

click me!