PAK vs ENG: இங்கிலாந்துக்கு வாழ்வா சாவா போட்டி..! 6வது டி20 போட்டி டாஸ் ரிப்போர்ட்

By karthikeyan VFirst Published Sep 30, 2022, 8:06 PM IST
Highlights

பாகிஸ்தானுக்கு எதிரான 6வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
 

இங்கிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 7 டி20 போட்டிகள் கொண்ட தொடரில்  ஆடிவருகிறது. 5 போட்டிகளின் முடிவில் பாகிஸ்தான் அணி 3-2 என முன்னிலை வகிக்கிறது.

6வது  டி20 போட்டி இன்று லாகூரில் நடக்கிறது. இந்த போட்டியில் ஜெயித்தால் பாகிஸ்தான் அணி தொடரை வென்றுவிடும். கடைசி 2 போட்டிகளில் ஜெயித்தால் மட்டுமே இங்கிலாந்து அணியால் தொடரை வெல்லமுடியும் என்பதால், தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைக்க கண்டிப்பாக வெற்றி பெற்றே தீரவேண்டிய கட்டாயத்தில் இன்றைய போட்டியில் ஆடுகிறது.

இதையும் படிங்க - டி20 உலக கோப்பை வின்னர், ரன்னர், மற்ற அணிகளுக்கு பரிசுத்தொகை எவ்வளவு..? ஐசிசி அறிவிப்பு

லாகூரில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்ததால் பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் ஆடுகிறது.

இங்கிலாந்து அணி:

ஃபிலிப் சால்ட் (விக்கெட் கீப்பர்), அலெக்ஸ் ஹேல்ஸ், டேவிட் மலான், பென் டக்கெட், ஹாரி ப்ரூக், மொயின் அலி (கேப்டன்), சாம் கரன், டேவிட் வில்லி, அடில் ரஷீத், ரீஸ் டாப்ளி, ரிச்சர்ட் க்ளீசன்.

முதல் 5 போட்டிகளில் 4 அரைசதங்களை விளாசி பாகிஸ்தானின் வெற்றி நாயகனாக திகழ்ந்த முகமது ரிஸ்வானுக்கு இந்த போட்டியில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக முகமது ஹாரிஸ் என்ற விக்கெட் கீப்பர் அறிமுகமாகியுள்ளார்.

இதையும் படிங்க - பும்ராவின் காயத்திற்கு ரோஹித் மற்றும் டிராவிட் தான் காரணம்..?

பாகிஸ்தான் அணி:

பாபர் அசாம் (கேப்டன்), முகமது ஹாரிஸ் (விக்கெட் கீப்பர்), ஷான் மசூத், இஃப்டிகார் அகமது, ஹைதர் அலி, ஷதாப் கான், ஆசிஃப் அலி, முகமது நவாஸ், ஆமீர் ஜமால், முகமது வாசிம், ஷாநவாஸ் தஹானி.
 

click me!