டி20 உலக கோப்பையில் பும்ரா ஆட ஒரு வழி இருக்கு..! ரசிகர்கள் செம குஷி

டி20 உலக கோப்பையில் ஜஸ்ப்ரித் பும்ரா ஆடுவதற்கு ஒரு வழி இருக்கிறது. இதை அறிந்த ரசிகர்கள் உற்சாகமாகவுள்ளனர்.
 

icc doctor speaks about chances of jasprit bumrah to play for india in t20 world cup

டி20 உலக கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், கோப்பையை வெல்வதற்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி  தீவிரமாக தயாராகிவரும் நிலையில், இந்திய அணியின் நட்சத்திர ஃபாஸ்ட் பவுலர் ஜஸ்ப்ரித் பும்ரா காயத்தால் டி20 உலக கோப்பையிலிருந்து விலகியது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.

ஜஸ்ப்ரித் பும்ராவைத்தான் இந்திய அணி ஃபாஸ்ட் பவுலிங்கில் அதிகமாக சார்ந்திருக்கிறது. பும்ரா தான் டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட். அவர் காயத்தால் ஆசிய கோப்பையில் ஆடாததால் தான், டெத் ஓவர்களில் அதிக ரன்களை வாரி வழங்கி ஆசிய கோப்பையில் இந்திய அணி தோற்றது.

Latest Videos

இதையும் படிங்க - டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இவங்க 4 பேரும் கண்டிப்பா இருந்திருக்கணும்..!

ஆனால் காயத்திலிருந்து மீண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் ஆடிய பும்ரா, டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியிலும் இடம்பெற்றிருந்தார். இந்நிலையில், அவரது முதுகு பிரச்னை காரணமாக மீண்டும் காயத்தால் அவதிப்படும் அவர், தென்னாப்பிரிக்க தொடரிலிருந்து விலகி பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் உள்ளார்.  இந்த காயத்திலிருந்து மீள 6 மாதங்கள் ஆகும் என்பதால் அவர் டி20 உலக கோப்பையிலிருந்தும் விலகியுள்ளார். 

ஆஸி., ஆடுகளங்களில் பும்ரா கடும் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்பதால் அவர் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், அவர் காயத்தால் டி20 உலக கோப்பையில் ஆடமுடியாதது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.

இதையும் படிங்க - டி20 உலக கோப்பை வின்னர், ரன்னர், மற்ற அணிகளுக்கு பரிசுத்தொகை எவ்வளவு..? ஐசிசி அறிவிப்பு

இந்நிலையில், பும்ராவின் இந்த காயம் குறித்து பேசிய ஐசிசி மருத்துவர் ஒருவர், பும்ராவிற்கு ஏற்பட்டிருக்கும் காயம் அவரது கெரியருக்கே ஆபத்து ஏற்படுத்துமளவிற்கான காயம் இல்லை. இந்த காயத்திற்கு அறுவை சிகிச்சை எல்லாம் தேவைப்படாது. ஆனால் அதேவேளையில், இந்த காயத்திலிருந்து மீண்டு வர நீண்டகாலம் ஆகும். இதுமாதிரியான காயங்களுடன் சிலர் வலிநிவாரணிகளை எடுத்துக்கொண்டு விளையாடியிருக்கின்றனர். டி20 உலக கோப்பையில் பும்ரா கண்டிப்பாக ஆடவேண்டுமென்றால், வலிநிவாரணிகளை எடுத்துக்கொண்டு ஆடலாம். ஆனால் அவரது இயல்பான ஆட்டத்தை ஆடமுடியாது. மேலும், காயத்தின் தீவிரம் அதிகமாவதற்கான வாய்ப்பும் உள்ளது. எனவே பும்ரா விஷயத்தில் பிசிசிஐ பொறுமை காப்பது அவசியம். அவர் காயத்திலிருந்து முழுமையாக மீண்டு போதுமான ஓய்வெடுத்துவிட்டு, முழு ஃபிட்னெஸூடன் வருவதுதான் நல்லது என்று அந்த மருத்துவர் தெரிவித்துள்ளார்.
 

vuukle one pixel image
click me!
vuukle one pixel image