கவாஸ்கரே என்னை பாராட்டியிருக்கார்னா சும்மாவா..? பெருமைப்படும் இளம் வீரர்

By karthikeyan VFirst Published Sep 29, 2022, 10:08 PM IST
Highlights

இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவானான சுனில் கவாஸ்கரே தன்னை பாராட்டியிருக்கிறார் என்றால் பெருமையாக இருப்பதாக இளம் ரிஸ்ட் ஸ்பின்னர் ரவி பிஷ்னோய் பெருமைப்பட்டுள்ளார்.
 

டி20 உலக கோப்பை நெருங்கும் நிலையில், அனைத்து அணிகளும் அறிவிக்கப்பட்டு தீவிரமாக தயாராகிவருகின்றன. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும் அறிவிக்கப்பட்டு உலக கோப்பைக்காக தயாராகிவருகிறது.

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி தேர்வு மீது சில விமர்சனங்கள் எழுந்தன. முகமது ஷமியை மெயின் அணியில் எடுக்காதது, சஞ்சு சாம்சனை புறக்கணித்தது ஆகியவை விமர்சனத்துக்குள்ளானது.

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்த முன்னணி ஃபாஸ்ட் பவுலர் ஜஸ்ப்ரித் பும்ரா காயத்தால் விலகியுள்ளார். அவருக்கு பதிலாக முகமது சிராஜ் - முகமது ஷமி ஆகிய இருவரில் ஒருவர் எடுக்கப்படுவார் என்று தெரிகிறது.

இதையும் படிங்க - காயத்தால் டி20 உலக கோப்பையிலிருந்து விலகிய பும்ரா.. ஓராண்டுக்கு முன்பே எச்சரித்த அக்தர்! இப்ப வைரலாகும் வீடியோ

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவிச்சந்திரன் அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்ஸர் படேல், ஜஸ்ப்ரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங்.

ஸ்டாண்ட்பை  வீரர்கள் - முகமது ஷமி, ஷ்ரேயாஸ் ஐயர், ரவி பிஷ்னோய், தீபக் சாஹர்.

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் யுஸ்வேந்திர சாஹல், அக்ஸர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகிய மூவரும் ஸ்பின்னர்களாக எடுக்கப்பட்ட நிலையில், இளம் ரிஸ்ட் ஸ்பின்னர் ரவி பிஷ்னோய் அணியில் இடம்பெறாதது குறித்து சுனில் கவாஸ்கர் அதிருப்தி தெரிவித்திருந்தார். 

22 வயதே ஆன இளம் ஸ்பின்னரான ரவி பிஷ்னோய் ஐபிஎல்லில் அபாரமாக ஆடி அதன்விளைவாக இந்திய அணியில் இடம்பிடித்தார். இந்திய அணியில் ஆட கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் தனது திறமையை நிரூபித்தார். 10 டி20 போட்டிகளில் ஆடி 16 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவரை டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் புறக்கணிப்பதற்கான காரணமே இல்லை. ஆனால் அனுபவமின்மை காரணமாக அவர் அணியில் எடுக்கப்படவில்லை.

ரவி பிஷ்னோய் குறித்து பேசிய கவாஸ்கர், அடுத்த 2 ஆண்டில் அடுத்த  டி20 உலக கோப்பை வரப்போகிறது. எதிர்காலத்தில் பல டி20 உலக கோப்பைகளில் ரவி பிஷ்னோய் ஆடுவார். அவருக்கு இன்னும் வயது இருக்கிறது. அணியிலிருந்து நீக்கவே முடியாத அளவிற்கு திறமையான வீரர் ரவி பிஷ்னோய். அனுபவம் ஆக ஆக அனைத்துவிதமான அணிகளிலும் இடம்பெறுவார் என்று ரவி பிஷ்னோயை கவாஸ்கர் புகழ்ந்து பேசியிருந்தார்.

இதையும் படிங்க - INDL vs AUSL: சுரேஷ் ரெய்னாவின் செம டைவ் கேட்ச்.. வைரல் வீடியோ..! கொண்டாடும் ரசிகர்கள்

அதை அறிந்த ரவி பிஷ்னோய், கவாஸ்கர் தன்னை பற்றி பேசியது குறித்து பேசியபோது, கவாஸ்கரே எனக்கு ஆதரவாக இருக்கிறார் என்றால் என்னிடம் ஏதோ இருக்கிறது. உலக கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்திய லெஜண்ட் கிரிக்கெட் வீரரே என் மீது அபிப்ராயம் வைத்திருக்கிறார் என்றால், அது எனது நம்பிக்கையை அதிகரிக்கிறது என்று ரவி பிஷ்னோய் கூறியிருக்கிறார்.
 

click me!