ஒரு கேப்டனாக அதற்குள்ளாக தோனியின் ரெக்கார்டை முறியடித்த ரோஹித் சர்மா

By karthikeyan VFirst Published Sep 29, 2022, 7:53 PM IST
Highlights

ஒரு ஆண்டில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு அதிக வெற்றிகளை பெற்றுக்கொடுத்த கேப்டன் என்ற தோனியின் சாதனையை முறியடித்து ரோஹித் சர்மா புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.
 

ரோஹித் சர்மா இந்திய அணியின் முழுநேர கேப்டன் பொறுப்பை ஏற்று சுமார் ஓராண்டு ஆகிவிட்டது. கடந்த ஆண்டு நடந்த டி20 உலக கோப்பையுடன் விராட் கோலி வெள்ளைப்பந்து கிரிக்கெட் அணிகளுக்கான கேப்டன்சியிலிருந்து விலகியதையடுத்து, ரோஹித் சர்மா கேப்டன்சியை ஏற்றார். அதன்பின் டெஸ்ட் அணியின் கேப்டன்சியிலிருந்தும் கோலி விலகியதால் டெஸ்ட் கேப்டன்சியையும் ஏற்றார் ரோஹித்.

ரோஹித் சர்மாவின் கேப்டன்சியில் இந்திய அணி அபாரமாக ஆடி வெற்றிகளை குவித்துவரும் நிலையில், டி20 உலக கோப்பையை வெல்வதற்காக தீவிரமாக தயாராகிவருகிறது.

இதையும் படிங்க -  டி20 உலக கோப்பையிலிருந்து விலகும் பும்ரா..? இந்தியாவிற்கு மரண அடி.. மாற்று வீரர் அவரா..?

இந்நிலையில், இந்திய அணி தொடர் சாதனைகளை குவித்துவருகிறது. ஆஸி.,க்கு எதிரான 3வது டி20 போட்டியில் வெற்றி பெற்றதையடுத்து, ஒரு ஆண்டில் டி20 கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளை குவித்த அணி என்ற சாதனையை படைத்தது இந்தியா. பாகிஸ்தான் அணி 2021ல் 20 டி20 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தது. 2022ல் 21வது டி20 வெற்றியை பெற்று ஆஸி.,க்கு எதிரான கடைசி டி20 போட்டியிலேயே பாகிஸ்தானின் சாதனையை முறியடித்த இந்திய அணி, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 வெற்றியுடன் சேர்த்து மொத்தமாக 22 வெற்றிகளை பெற்றது. இன்னும் டி20 உலக கோப்பையும் எஞ்சியிருப்பதால் இந்த எண்ணிக்கை உயரும்.

இதையும் படிங்க - INDL vs AUSL: சுரேஷ் ரெய்னாவின் செம டைவ் கேட்ச்.. வைரல் வீடியோ..! கொண்டாடும் ரசிகர்கள்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 வெற்றி, இந்த ஆண்டில் ரோஹித் சர்மாவின் கேப்டன்சியில் இந்திய அணி பெற்ற 16வது டி20 வெற்றி. இதன்மூலம் ஒரு ஆண்டில் இந்தியாவிற்கு அதிக வெற்றிகளை பெற்றுக்கொடுத்த கேப்டன் என்ற தோனியின் (2016ல் 15 வெற்றிகள்) சாதனையை முறியடித்து ரோஹித் சர்மா புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். டி20 உலக கோப்பையும் நடக்கவுள்ளதால் ரோஹித் சர்மாவின் இந்த வெற்றி எண்ணிக்கை இன்னும் கூடும்.
 

click me!