INDL vs AUSL: சுரேஷ் ரெய்னாவின் செம டைவ் கேட்ச்.. வைரல் வீடியோ..! கொண்டாடும் ரசிகர்கள்

By karthikeyan VFirst Published Sep 29, 2022, 6:28 PM IST
Highlights

ஆஸ்திரேலியா லெஜண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சுரேஷ் ரெய்னா பிடித்த அருமையான கேட்ச் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
 

சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அபாரமாக ஆடி பல வெற்றிகளில் முக்கியமான பங்களிப்பை வழங்கி, நட்சத்திர வீரராக ஜொலித்தவர் சுரேஷ் ரெய்னா. தோனி தலைமையிலான இந்திய அணியில் மிக முக்கியமான வீரராக வலம்வந்தவர் ரெய்னா.

இந்திய அணிக்காக 226 ஒருநாள், 78 டி20 மற்றும் 18 டெஸ்ட் போட்டிகளில் ஆடியிருக்கிறார் ரெய்னா. 2011 உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் முக்கியமான வீரராக திகழ்ந்தார் ரெய்னா. அதிரடியான வீரரான ரெய்னாவின் ஷார்ட் பிட்ச் பந்துகளை எதிர்கொள்ள தெரியாத பலவீனம் அம்பலப்பட்டதையடுத்து, அவரது கெரியர் கிராஃப் சரிய தொடங்கியது. அத்துடன் அவரது கெரியரும் முடிவுக்கு வந்தது.

இதையும் படிங்க - டி20 உலக கோப்பையிலிருந்து விலகும் பும்ரா..? இந்தியாவிற்கு மரண அடி.. மாற்று வீரர் அவரா..?

சுரேஷ் ரெய்னா அதிரடியான பேட்ஸ்மேன் மட்டுமல்லாது அபாரமான ஃபீல்டரும் கூட. அவரது பேட்டிங்கிற்கு அப்பாற்பட்டு ஃபீல்டிங்கிற்காகவே இந்திய அணியில் இடம்பிடித்தவர் ரெய்னா. அவர் ஆடிய சமயத்தில் சர்வதேச கிரிக்கெட்டின் டாப் 3 சிறந்த ஃபீல்டர்களில் ஒருவராக திகழ்ந்தவர். ஆல்டைம் சிறந்த ஃபீல்டர்களில் ஒருவர் என்று கூட கூறலாம். 

ரிக்கி பாண்டிங், ஆண்ட்ரூ சைமண்ட்ஸ், ஜாண்டி ரோட்ஸ் மாதிரியான ஆல்டைம் சிறந்த ஃபீல்டர்களின் வரிசையில் ரெய்னாவும் இருக்கிறார். அவர்களே புகழ்ந்த ஃபீல்டராகவும் இருந்தார் ரெய்னா. அப்பேர்ப்பட்ட அருமையான ஃபீல்டர் ரெய்னா.

ரெய்னாவின் ஃபீல்டிங் திறன் அவர் கடந்த 2 ஆண்டுகளாக பெரியளவில் கிரிக்கெட் ஆடாதபோதிலும், இன்னும் கொஞ்சம் கூட குறையவில்லை என்பது வியப்பான விஷயம் தான். சாலை பாதுகாப்பு டி20 தொடரில் இந்தியா லெஜண்ட்ஸ் - ஆஸ்திரேலியா லெஜண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் பாயிண்ட் திசையில் அபாரமான கேட்ச் ஒன்றை பிடித்து அனைவரையும் மிரட்டிவிட்டார்.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங்  ஆடிய ஆஸ்திரேலியா லெஜண்ட்ஸ் அணி 20 ஓவரில் 171 ரன்கள் அடிக்க, நமன் ஓஜாவின் அதிரடி அரைசதம் (90 * ரன்கள்) மற்றும் இர்ஃபான் பதானின் காட்டடி  ஃபினிஷிங்கால்(12 பந்தில் 37 ரன்கள்) கடைசி ஓவரின் 2வது பந்தில் இலக்கை அடித்து இந்தியா லெஜண்ட்ஸ் அணி வெற்றி பெற்றது.

இதையும் படிங்க - டி20 கிரிக்கெட்டில் ஷிகர் தவான் மற்றும் முகமது ரிஸ்வானின் தரமான சாதனைகளை தகர்த்தெறிந்த சூர்யகுமார் யாதவ்

இந்த போட்டியில் ஆஸ்திரேலியா லெஜண்ட்ஸ் அணி வீரர் பென் டன்க் பாயிண்ட் திசையில் அடித்த பந்தை அந்த திசையில் ஃபீல்டிங் செய்த ரெய்னா செமயாக டைவ் அடித்து கேட்ச் பிடித்தார். அவர் சர்வதேச கிரிக்கெட்டில்  ஆடியபோது செய்த ஃபீல்டிங்கை போலவே இப்போதும் ஃபீல்டிங் செய்தது வியப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
 

🥵🫂 pic.twitter.com/fyBo9ckq33

— Dhruv Joshi (@dhruvjoshi___25)
click me!