நமன் ஓஜா அதிரடி அரைசதம்.. இர்ஃபான் பதான் காட்டடி ஃபினிஷிங்! ஆஸி., லெஜண்ட்ஸை வீழ்த்தி இந்தியா லெஜண்ட்ஸ் வெற்றி

By karthikeyan VFirst Published Sep 29, 2022, 5:45 PM IST
Highlights

நமன் ஓஜாவின் அதிரடி அரைசதம் மற்றும் இர்ஃபான் பதானின் காட்டடி ஃபினிஷிங்கால் ஆஸி., லெஜண்ட்ஸை வீழ்த்தி இந்தியா லெஜண்ட்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
 

சாலை பாதுகாப்பு டி20 தொடரின் இன்றைய போட்டியில் இந்தியா லெஜண்ட்ஸ் - ஆஸ்திரேலியா லெஜண்ட்ஸ் அணிகள் மோதின. ராய்ப்பூரில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா லெஜண்ட்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

இந்தியா லெஜண்ட்ஸ் அணி:

நமன் ஓஜா (விக்கெட் கீப்பர்), சச்சின் டெண்டுல்கர் (கேப்டன்), சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங், யூசுஃப் பதான், இர்ஃபான் பதான், ஸ்டூவர்ட் பின்னி, ராஜேஷ் பவார், ராகுல் ஷர்மா, முனாஃப் படேல், அபிமன்யூ மிதுன்.

இதையும் படிங்க - டி20 உலக கோப்பையிலிருந்து விலகும் பும்ரா..? இந்தியாவிற்கு மரண அடி.. மாற்று வீரர் அவரா..?

ஆஸ்திரேலியா லெஜண்ட்ஸ் அணி:

ஷேன் வாட்சன் (கேப்டன்), அலெக்ஸ் தூலன், பென் டன்க், காலம் ஃபெர்குசன், நேதன் ரீர்டன், கேமரூன் ஒயிட், பிராட் ஹாடின் (விக்கெட் கீப்பர்), பிரைஸ் மெக்கைன், ஜேசன் க்ரேஜா, டிர்க் நான்ஸ், பிரெட் லீ.

முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணியில் ஷேன் வாட்சன் (30), தூலன் (35), பென் டன்க் (46), கேமரூன் ஒயிட் (30) ஆகியோர் சிறப்பாக ஆடியதால் ஆஸ்திரேலியா லெஜண்ட்ஸ் அணி 20 ஓவரில் 171 ரன்கள் அடித்தது.

172 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்தியா லெஜண்ட்ஸ் அணியில் சச்சின் டெண்டுல்கர் (10), சுரேஷ் ரெய்னா(11), யுவராஜ் சிங் (18), ஸ்டூவர்ட் பின்னி (2), யூசுஃப் பதான் (1) ஆகியோர் ஒருமுனையில் சீரான இடைவெளியில் தொடர்ச்சியாக ஆட்டமிழக்க, மறுமுனையில் நமன் ஓஜா மட்டும் தனித்து நின்று நிலைத்து ஆடி அரைசதம் அடித்தார்.  

இதையும் படிங்க- டி20 கிரிக்கெட்டில் ஷிகர் தவான் மற்றும் முகமது ரிஸ்வானின் தரமான சாதனைகளை தகர்த்தெறிந்த சூர்யகுமார் யாதவ்

அவர் மட்டும் தனிநபராக இலக்கை நோக்கி இந்தியா லெஜண்ட்ஸை அழைத்து செல்ல, 7ம் வரிசையில் இறங்கிய இர்ஃபான் பதான் சிக்ஸர்களாக விளாசி சிறப்பாக முடித்து கொடுத்தார். 12 பந்தில் 2 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 37 ரன்களை விளாசினார் இர்ஃபான் பதான். நமன் ஓஜா 62 பந்துகளில் 90 ரன்களை குவித்தார்.  கடைசி ஓவரில் இலக்கை அடித்த இந்தியா லெஜண்ட்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
 

click me!