டேவிட் மில்லர் இல்லாமல் களமிறங்கும் குஜராத் டைட்டன்ஸ்: முதல் போட்டியிக்கான குஜராத் டைட்டன்ஸ் பிளேயிங் 11 இதோ!

Published : Mar 29, 2023, 04:36 PM IST
டேவிட் மில்லர் இல்லாமல் களமிறங்கும் குஜராத் டைட்டன்ஸ்: முதல் போட்டியிக்கான குஜராத் டைட்டன்ஸ் பிளேயிங் 11 இதோ!

சுருக்கம்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் டேவிட் மில்லர் இல்லாத நிலையில், அவருக்குப் பதிலாக மேத்யூ வேட் களமிறங்க வாய்ப்பு உள்ளது.  

ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வரும் ஐபிஎல் திருவிழாவின் 16ஆவது சீசன் நாளை (31 ஆம் தேதி) மிகவும் பிரம்மாண்டமாக தொடங்க இருக்கிறது. 10 அணிகள் இடம் பெற்றுள்ள இந்த தொடரின் முதல் சீசனில் நடப்பு சாம்பியன் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், எம் எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. 

பும்ராவிற்குப் பதிலாக களமிறங்க தயாரான அர்ஜூன் டெண்டுல்கர்!

கடந்த சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், லக்னோ சுப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் புதிதாக களம் கண்டன. இந்த புதிய ரெண்டு அணிகளுமே ஐபிஎல் சீசனில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறின. புள்ளிப் பட்டியலில் குஜராத் டைட்டன்ஸ் முதலிடத்தையும், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி 3ஆவது இடத்தையும் பிடித்தது. ஆம், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி 14 போட்டிகளில் விளையாடி 9 போட்டிகளில் வெற்றி பெற்றது.

கேப்டனாக பொறுப்பேற்ற நிதிஷ் ராணா: கொல்கத்தா காளி கோயிலில் சாமி தரிசனம்!

இதே போன்று ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி 16 போட்டிகளில் பங்கேற்று இறுதிப் போட்டி உள்பட 12 போட்டிகளில் வெற்றி பெற்றது. ஆனால், பல முறை சாம்பியன் பட்டம் எல்லாம் பெற்ற மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளால் கூட பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியவில்லை. இந்த இரு அணிகளுமே 14 போட்டிகளில் பங்கேற்று புள்ளிப்பட்டியலில் கடைசி 2 இடங்கள் பிடித்தன.

ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் ரோகித் சர்மா: காரணம் என்ன தெரியுமா?

கடந்த சீசனில் டேவிட் மில்லர் மற்றும் ராகுல் திவேதியா பேட்டிங் காம்பினேஷன், முகமது ஷமி மற்றும் ரஷித் கானின் பவுலிங் காம்பினேஷன், அதோடு ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்ஷிப் என்று எல்லாம் சேர்ந்து குஜராத் டைட்டன்ஸுக்கு சாம்பியன் பட்டம் பெற்று கொடுத்தது. குஜராத் டைட்டன்ஸ் அணியிலிருந்து ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ரஹ்மானுல்லா குர்பாஸ், ஜேசன் ராய், லாக்கி ஃபெர்குசன் ஆகியோரை விடுவித்தது. அதே நேரத்தில் அதிக வீரர்களையும் குஜராத் டைட்டன்ஸ் வைத்திருந்தது. எனினும், சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக இருந்த கேன் வில்லியம்சனை குஜராத் டைட்டன்ஸ் ரூ.2 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.

ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற இந்த அணிகளுக்கு வாய்ப்பு ரொம்பவே அதிகம்!

ஓபனிங்:

சுப்மன் கில் மற்றும் விருத்திமான் சகா இருவரும் குஜராத் அணிக்கு தொடக்க வீரர்களாக களமிறங்கலாம். இவர்களைத் தொடர்ந்து கேன் வில்லியம்சன், ராகுல் திவேதியா, ஹர்திக் பாண்டியா ஆகியோர் இறங்கலாம்.

தென் ஆப்பிரிக்கா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் தொடர் நடந்து வரும் நிலையில் டேவிட் மில்லர் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் அவர் இடம் பெறவில்லை. அவருக்குப் பதிலாக மேத்யூ வேட் களமிறங்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. முகமது ஷமி, அல்சாரி ஜோசப், ரஷீத் கான், ஷிவம் மாவி, சாய் கிஷோர் ஆகியோர் குஜராத் அணிக்கு பந்து வீச்சாளராக இருக்கின்றனர்.

குஜராத் டைட்டன்ஸ் பிளேயிங் 11:

சுப்மன் கில், விருத்திமான் சகா, கேன் வில்லியம்சன், ராகுல் திவேதியா, ஹர்திக் பண்டியா, மேத்யூ வேட், அல்சாரி ஷமி, அல்சாரி ஜோசப், ரஷீன் கான், ஷிவம் மாவி அல்லது யாஷ் தயால், சாய் கிஷோர்.

IPL 2023: யார் யார் எந்தெந்த பிரபலங்கள் கலந்து கொண்டு டான்ஸ் ஆடுகிறார்கள் தெரியுமா?

குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர்கள்:

ஹர்திக் பாண்டியா, ஷுப்மன் கில், டேவிட் மில்லர், அபினவ் மனோகர், சாய் சுதர்சன், விருத்திமான் சாஹா, மேத்யூ வேட், ரஷித் கான், ராகுல் திவேதியா, விஜய் சங்கர், முகமது ஷமி, அல்சாரி ஜோசப், யாஷ் தயாள், பிரதீப் சங்வான், தர்ஷன் நல்கண்டே, ஜெயந்த் யாத் , ஆர்.சாய் கிஷோர், நூர் அகமது, கேன் வில்லியம்சன், ஒடியன் ஸ்மித், கேஎஸ் பரத், ஷிவம் மாவி, உர்வில் பட்டேல், ஜோசுவா லிட்டில், மோஹித் சர்மா.

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

வைபவ் சூர்யவன்ஷி ருத்ரதாண்டவம்.. மின்னல் வேக சதம்.. 433 ரன்கள் குவிப்பு.. பிரமிக்க வைத்த இந்தியா!
IND VS SA 3வது டி20.. சுப்மன் கில் அதிரடி நீக்கம்?.. சிஎஸ்கே வீரர் கம்பேக்.. பிளேயிங் லெவன் இதோ!