அகமதாபாத்தில் நடைபெற்று வரும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் 5ஆவது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் 20 ஓவர்களில் 168 ரன்கள் எடுத்துள்ளது.
நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் 5ஆவது போட்டி தற்போது அகமாதாபாத் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி விருத்திமான் சகா மற்றும் சுப்மன் கில் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
கேப்டன் என்பதால் ஓவரா அட்வாண்டேஜ் எடுத்த பாண்டியா – சைலண்டா வந்து விக்கெட் எடுத்த பூம் பூம் பும்ரா!
இதில், சகா 19 ரன்கள் எடுத்த நிலையில் பும்ரா யார்க்கருக்கு விக்கெட்டை இழந்தார். கேப்டன் சுப்மன் கில் பெரிதாக சோபிக்கவில்லை. பியூஷ் சாவ்லா ஓவரில் 31 ரன்கள் எடுத்த நிலையில் ரோகித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதன் பிறகு தமிழக வீரர் சாய் சுதர்சன் மற்றும் அஸ்மதுல்லா உமர்சாய் இருவரும் ஓரளவு தாக்குப்பிடித்தனர். உமர்சாய் 17 ரன்களில் ஜெரால்டு கோட்ஸி பந்தில் திலக் வர்மாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
டேவிட் மில்லர் 12 ரன்களில் பும்ரா பந்தில் பாண்டியாவிடம் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார். இதே போன்று சாய் சுதர்சன் 45 ரன்களில் பும்ரா பந்தில் திலக் வர்மாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். சீரான இடைவெளியில் குஜராத் டைட்டன்ஸ் அணியானது விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையிலும் அடுத்தடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் ரன்கள் எடுத்துக் கொடுத்தனர். கடைசியாக விஜய் சங்கர் மற்றும் ராகுல் திவேதியா இருவரும் இணைந்து விளையாடினர்.
Sanju Samson: கடைசி வரை போராடிய ராகுல் அண்ட் பூரன் – 20 ரன்களில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ்!
போட்டியின் 18ஆவது ஓவரை அறிமுக வீரர் லூக் உட் வீசினார். இந்த ஓவரில் ராகுல் திவேதியா 6, 0, 4, 4, 2, நோபால், வைடு, 1 என்று வரிசையாக 19 ரன்கள் எடுத்துக் கொடுத்தார். கடைசி ஓவரை ஜெரால்டு கோட்ஸி வீசினார். இந்த ஓவரின் முதல் பந்திலேயே ராகுல் திவேதியா 22 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து ரஷீத் கான் களமிறங்கினார். எனினும், பெரிதாக வாய்ப்பில்லை என்றாலும் குஜராத் டைட்டன்ஸ் அணியானது 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் எடுத்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணியைப் பொறுத்த வரையில் பவுலிங்கில் ஜஸ்ப்ரித் பும்ரா 4 ஓவர்கள் வீசி 14 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். ஜெரால்டு கோட்ஸி 2 விக்கெட்டும், பியூஷ் சாவ்லா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.