Sanju Samson: கடைசி வரை போராடிய ராகுல் அண்ட் பூரன் – 20 ரன்களில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ்!

By Rsiva kumarFirst Published Mar 24, 2024, 8:06 PM IST
Highlights

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 4 ஆவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் தொடரின் 4ஆவது போட்டி ஜெய்பூரில் நடைபெற்றது. இதில் முதலில் டாஸ் வென்று ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்டிங் செய்தது. அதன்படி யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஜோஸ் பட்லர் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

கேப்டனாக களமிறங்கும் சுப்மன் கில் – கம்பீர தோரணையுடன் டாஸ் போட வந்து வெற்றியோடு சென்ற ஹர்திக் பாண்டியா!

இதில், ஜோஸ் பட்லர் 11 ரன்களில் ஆட்டமிழக்க, ஜெய்ஸ்வால் 24 ரன்களில் நடையை கட்டினார். பின்னர் சஞ்சு சாம்சன் மற்றும் ரியான் பராக் இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஹெட்மயர் 5 ரன்னில் நடையை கட்டினார். கடைசியாக வந்த துருவ் ஜூரெல் 20 ரன்கள் எடுக்க, சஞ்சு சாம்சன் 52 பந்துகளில் 3 பவுண்டரி, 6 சிக்ஸர் உள்பட 82 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இறுதியாக ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 193 ரன்கள் எடுத்தது. பின்னர், 194 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியில் குயீண்டன் டி காக் மற்றும் கேஎல் ராகுல் இருவரும் களமிறங்கினர். இதில் முதல் ஓவரிலேயே குயீண்டன் டி காக் 4 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த தேவ்தத் படிக்கல் ஹெல்மெட்டில் அடி வாங்கிய நிலையில் அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார்.

சஞ்சு சாம்சன், ரியான் பராக் அதிரடி காட்ட, 193 ரன்கள் குவித்த ஆர்ஆர் – பீல்டிங்கில் சொதப்பிய லக்னோ!

அதன் பிறகு வந்த ஆயுஷ் பதோனி 1 ரன்னில் நடையை கட்டினார். இதன் மூலமாக லக்னோ அணியானது 11 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதையடுத்து வந்த தீபக் ஹூடா ஓரளவு தாக்குபிடித்து 26 ரன்கள் சேர்த்தார். அதன் பிறகு தான் கேஎல் ராகுல் மற்றும் நிக்கோலஸ் பூரன் இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடினர். இதில், கேஎல் ராகுல் ஹெல்மெட்டில் அடிவாங்கிய நிலையில் அதன் பிறகு அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தார். இதில், அவர் 44 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்ஸர் உள்பட 58 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

லக்னோ அணியானது 15 ஓவர்களில் 134 ரன்கள் எடுத்திருந்த நிலையில், கடைசி 5 ஓவருக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16 ஓவர்கள் வரையில் சஞ்சு சாம்சன், சந்தீப் சர்மாவிற்கு ஓவர்கள் கொடுக்கவில்லை. கடைசியாக வந்து 3 ஓவர்கள் வீசி ஒரு விக்கெட் கைப்பற்றினார்.

ஒரு கேப்டனாக எப்படி விளையாடனும் என்று வழிகாட்டிய சஞ்சு சாம்சன் – அரைசதம் அடித்த முதல் கேப்டன்!

இதில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது சில கேட்சுகளை தவறவிட்டது. கடைசி ஓவரில், லக்னோ அணிக்கு 27 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அந்த ஓவரை ஆவேஷ் கான் வீசினார். இந்த ஓவரில் அவர் 6 ரன்கள் மட்டுமே கொடுக்கவே லக்னோ 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் மட்டுமே எடுத்து 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்தப் போட்டியில் சிறப்பாக பேட்டிங் செய்த சஞ்சு சாம்சன் ஆட்டநாயகன் விருது வென்றார்.

click me!