குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும்.
பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான 70ஆவது ஐபிஎல் லீக் போட்டி நடக்கிறது. இந்தப் போட்டியுடன் ஐபிஎல் லீக் போட்டிகள் முடிவடைகிறது. ஏற்கனவே குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் ஆகிய அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்குள் சென்றுவிட்டன.
டெல்லி, கொல்கத்தாவிற்கு ஆப்பு வச்ச ஹோம் மைதானம்; மும்பை, பெங்களூருக்கு எப்படியோ?
இதையடுத்து கடைசி இடத்திற்கான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் போட்டி போடுகின்றன. இதில், மும்பை மற்றும் பெங்களூரு அணியின் வெற்றி தோல்வியை பொறுத்து தான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு அமையும்.
பெங்களூரு மைதானத்தில் நடக்கும் 70ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழையும். இதுவரையில் இரு அணிகளும் 2 போட்டிகளில் மோதியுள்ளன. இதில், இரு அணிகளும் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. இந்த சீசனில் இரு அணிகளும் முதல் முறையாக மோதுகின்றன.
பிளே ஆஃப் வாய்ப்பு இழந்து 4ஆவது அணியாக பரிதாபமாக வெளியேறிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!
இரு அணிகளும் பலம் வாய்ந்த அணி என்பதால், இந்தப் போட்டி கடுமையானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்த குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு இந்தப் போட்டி ஒரு பயிற்சி ஆட்டமாக கூட இருக்கும். ஆதலால், முக்கிய வீரர்களுக்கு இந்தப் போட்டியில் ஓய்வு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொல்கத்தாவில் கோலி கோலி என்று கோஷமிட்ட ரசிகர்கள்: காம்பீர் ஸ்டைலில் பதிலடி கொடுத்த நவீன் உல் ஹக்!