தனது இருக்கைக்கு அருகில் அமர்ந்த காவலரை தாக்கும் பெண் ரசிகை: வைரலாகும் வீடியோ!

By Rsiva kumar  |  First Published May 29, 2023, 12:05 AM IST

நரேந்திர மோடி மைதானத்தில் தனது இருக்கைக்கு அருகில் அமர்ந்த காவலரை தாக்கும் பெண்ணின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2023 ஃபைனல் இன்று நடக்க இருந்தது. ஆனால், டாஸ் கூட போட முடியாத அளவிற்கு அகமதாபாத்தில் மழை பெய்தது. இதன் எப்படியாவது மழை நின்றால் போட்டியை நடத்திவிடாலம் என்று ஆலோசித்து வந்த நிலையில், கடைசி வரை மழை நிற்கவில்லை. இதன் காரணமாக போட்டி நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

IPL Final 2023 CSK vs GT Live: கொட்டி தீர்க்கும் மழை: போட்டி நாளைக்கு ஒத்தி வைப்பு!

Tap to resize

Latest Videos

மீண்டும் நாளை இரவு 7.30 மணிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2023 இறுதிப் போட்டி நடக்க இருக்கிறது. ஆனாலும், நாளையும் 29ஆம் தேதி மழை பெய்யக் கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை நாளையும் மழையின் காரணமாக போட்டி நடக்கவில்லை என்றால் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு தான் சாம்பியன்ஸ் டிராபி வழங்கப்படும்.

எனக்கு கிடைக்காதது யாருக்கும் கிடைக்க கூடாது: வைரலாகும் முகேஷ் அம்பானி மீம்ஸ்!

ஐபிஎல் விதிமுறையின் படி குஜராத் டைட்டன்ஸ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். எப்படியும் இன்றைய போட்டியை பார்த்துவிட வேண்டும் என்று ஆவலுடன் வந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. முதல் முறையாக ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் இந்தப் போட்டி தான் மழையின் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இது சேப்பாக்கம் இல்ல, நரேந்திர மோடி ஸ்டேடியம் – CSK vs GT போட்டிக்காக திரண்ட லட்சக்கணக்கான சிஎஸ்கே ரசிகர்கள்!

விமானம், ரயில், ஹோட்டல், டிக்கெட் என்று செலவு செய்து வந்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான். அதோடு மழையின் நனைந்தபடியே திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், மைதானத்தில் தனது இருக்கைக்கு அருகில் அமர்ந்த காவலரை பெண் ரசிகை ஒருவர் சரமாரியாக தாக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஏன், எதற்கு என்பதற்கான காரணம் குறித்து எந்த தகவலும் இல்லை. ஆனால், அந்த காவலர் மது அருந்துவிட்டு வந்து பெண் ரசிகையின் இருக்கைக்கு அருகாமையில் வந்து அமர்ந்ததாக கூறப்படுகிறது. எனினும், இந்த சம்பவம் குறித்து முறையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடைசி ஐபிஎல் போட்டியில் விளையாடும் அம்பத்தி ராயுடு; ஓய்வு பெற தயாரான ராயுடு!

 



Over 1 lakh people filled the Stadium anticipation of between and on Sunday. A fan,who was present inside the stadium,shared a video of a woman aggressively shoving and hitting a ,reasons are unknown pic.twitter.com/MSIdrVFjlV

— Smriti Sharma (@SmritiSharma_)

 

Problem In CSK vs GT Match

CSK Fans Fighting with Drunk Police pic.twitter.com/DYzjtq1mzq

— Cinema News (@VtvVtv86995078)

 

 

click me!