டி20 உலக கோப்பை: இந்திய அணியின் பெரிய பிரச்னை இதுதான்.. உடனே அவரை அணியில் ஆடவைங்க..! அலர்ட் செய்யும் கம்பீர்

By karthikeyan V  |  First Published Nov 5, 2022, 9:55 PM IST

டி20 உலக கோப்பையில் ஸ்பின் பவுலிங் தான் இந்திய அணியின் பெரிய பிரச்னையாக இருப்பதாகவும், யுஸ்வேந்திர சாஹலை ஆடவைக்க வேண்டும் என்றும் கௌதம் கம்பீர் வலியுறுத்தியுள்ளார்.
 


டி20 உலக கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சூப்பர் 12 சுற்று நாளையுடன் முடிவடைகிறது. க்ரூப் 1லிருந்து நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறிவிட்டன. க்ரூப் 2லிருந்து இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் முன்னேறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

இந்திய அணி இந்த உலக கோப்பையில் வெற்றிகளை பெற்றுவந்தாலும், சில குறைகள் இருப்பதையும் மறுக்கமுடியாது. தினேஷ் கார்த்திக் ஒரு போட்டியில் கூட சரியாக ஆடவில்லை. பும்ரா இல்லாமல் இருந்தாலும் ஃபாஸ்ட் பவுலிங் யூனிட் சிறப்பாக பந்துவீசிவருகிறது. ஆனால் ஸ்பின் பவுலிங் யூனிட் தான் சோபிக்கவில்லை.

Latest Videos

undefined

ஐபிஎல் 2023: சிஎஸ்கே அணி கழட்டிவிடும் 2 வீரர்கள் இவர்கள் தான்..!

சீனியர் பவுலர், அனுபவமிக்கவர் என்ற வகையில் அஷ்வினை இந்திய அணி ஆடவைக்கிறது. ஆல்ரவுண்டர் ஜடேஜாவிற்கு மாற்று வீரராக அக்ஸர் படேல் ஆடுகிறார். ஆனால் அஷ்வின் - அக்ஸர் ஸ்பின் ஜோடி அவர்களது பணியை சரியாக செய்யவில்லை. ஸ்பின்னர்கள் மிடில் ஓவர்களில் விக்கெட் வீழ்த்தி கொடுப்பது அணியின் வெற்றிக்கு முக்கியம். ஆனால் அஷ்வினும் அக்ஸரும் இதுவரை பெரிதாக விக்கெட் வீழ்த்தவில்லை. அஷ்வின் 4 போட்டிகளில் வெறும் 3 விக்கெட் மட்டுமே வீழ்த்தியிருக்கிறார்.

இந்த உலக கோப்பையில் இனிவரும் ஒவ்வொரு போட்டியும் மிக முக்கியமான போட்டி என்பதால் இந்திய அணி கண்டிப்பாக இந்த பிரச்னையில் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. அதைத்தான் கௌதம் கம்பீரும் சுட்டிக்காட்டி அலர்ட் செய்திருக்கிறார்.

இந்திய அணி அவரை ஆடவைத்து ரிஷப் பண்ட்டை உட்காரவைப்பது பெரும் தவறு! ஆஸி., முன்னாள் கேப்டன் கடும் விளாசல்

இதுகுறித்து பேசிய கௌதம் கம்பீர், இந்திய அணியின் ஸ்பின் பவுலிங் தான் பிரச்னையாக உள்ளது. அணியின் ஸ்பின்னர்கள் விக்கெட் வீழ்த்தவில்லை என்றால் அது பிரச்னையாக அமையும். மிடில் ஓவர்களில் இந்திய ஸ்பின்னர்கள் விக்கெட் வீழ்த்தவில்லை. இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில் கண்டிப்பாக ஸ்பின்னர்கள் மிடில் ஓவர்களில் விக்கெட்டை வீழ்த்தியே ஆகவேண்டும். அப்படி இல்லையென்றால் பெரிய பிரச்னையாக இருக்கும். இந்திய அணி ஒரு ரிஸ்ட் ஸ்பின்னரை மிஸ்செய்கிறது. ரிஸ்ட் ஸ்பின்னரை (சாஹலை) கண்டிப்பாக ஆடவைக்க வேண்டும். அஷ்வினுக்கு பதில் சாஹலை ஆடவைக்க வேண்டும். அஷ்வின் பேட்டிங் ஆடுவார் என்பது உண்மைதான். ஆனால் பேட்ஸ்மேன்கள் மேல்வரிசையில் ஒழுங்காக பேட்டிங் ஆடினால் அஷ்வினின் பேட்டிங் பங்களிப்பே தேவைப்படாது. இந்த உலக கோப்பையில் ரிஸ்ட் ஸ்பின்னர்கள் சிறப்பாக ஆடியிருக்கிறார்கள். எனவே சாஹலை ஆடவைக்க வேண்டும் என்று கம்பீர் கருத்து கூறியுள்ளார்.
 

click me!