ஐபிஎல் 2023: சிஎஸ்கே அணி கழட்டிவிடும் 2 வீரர்கள் இவர்கள் தான்..!

By karthikeyan VFirst Published Nov 5, 2022, 7:46 PM IST
Highlights

ஐபிஎல் 16வது சீசனுக்கு முன்பாக சிஎஸ்கே அணி விடுவிக்கும் 2 வீரர்கள் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 
 

ஐபிஎல்லில் 15 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்துள்ளன. இந்த 15 சீசன்களில் 4 முறை கோப்பையை வென்று, ஐபிஎல்லின் வெற்றிகரமான அணியாக திகழ்கிறது தோனி தலைமையிலான சிஎஸ்கே. 2010, 2011, 2018, 2021 ஆகிய 4 சீசன்களிலும் கோப்பையை வென்றுள்ளது சிஎஸ்கே.

இந்தியாவில் ஹோம் & அவே ஃபார்மட்டில் பழையபடி நடக்கும் ஐபிஎல் 16வது சீசன்(2023) தான் சிஎஸ்கே கேப்டன் தோனியின் கடைசி சீசனாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்த சீசனில் கோப்பையை வென்று வெற்றியுடன் தோனி ஓய்வு பெறுவார் என்பது எதிர்பார்ப்பு.

இந்திய அணி அவரை ஆடவைத்து ரிஷப் பண்ட்டை உட்காரவைப்பது பெரும் தவறு! ஆஸி., முன்னாள் கேப்டன் கடும் விளாசல்

கடந்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடந்ததால் அடுத்த சீசனுக்கான ஏலம் மினி ஏலமாக நடக்கவுள்ளது. டிசம்பர் மாதம் ஐபிஎல் 16வது சீசனுக்கான மினி ஏலம் நடக்கவுள்ள நிலையில், ஒவ்வொரு அணியும் விடுவிக்க விரும்பும் வீரர்கள் பட்டியலை வரும் 15ம் தேதிக்குள்ளாக சமர்ப்பிக்க வேண்டும் என்று ஐபிஎல் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

சிஎஸ்கே அணியிலிருந்து 2 வீரர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்று தெரிகிறது. சிஎஸ்கே அணியின் செல்லப்பிள்ளையான ஆல்ரவுண்டர் ஜடேஜாவுக்கும் சிஎஸ்கே அணி நிர்வாகத்திற்கும் இடையே மோதல் மூண்டது. சிஎஸ்கே அணியின் சமூக வலைதள பக்கங்களை ஜடேஜா அன்ஃபாலோ செய்தார்.  சிஎஸ்கே அணியிலிருந்து அவர் விலக விரும்பியுள்ளார். 

ஆனால் ஜடேஜா கண்டிப்பாக அணிக்கு தேவை என்று கேப்டன் தோனி சிஎஸ்கே அணி நிர்வாகத்திடம் தெள்ளத்தெளிவாக கூறிவிட்டார். எனவே ஜடேஜா கண்டிப்பாக விடுவிக்கப்படமாட்டார். அதையும் மீறி ஜடேஜா சிஎஸ்கே  அணிக்கு ஆடவிரும்பவில்லை என்றால், அவர் ஐபிஎல்லில் ஆடாமல் வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் தோனி பிரச்னையை சரிசெய்து ஜடேஜா ஆடவைத்துவிடுவார். 

டி20 உலக கோப்பை: முக்கியமான போட்டியில் ஜிம்பாப்வேவை எதிர்கொள்ளும் இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்

சிஎஸ்கே அணி, இங்கிலாந்தின் கிறிஸ் ஜோர்டான் மற்றும் நியூசிலாந்தின் ஆடம் மில்னே ஆகிய இருவரையும் விடுவிக்க உள்ளதாக தெரிகிறது. கடந்த சீசனுக்கான மெகா ஏலத்தில் கிறிஸ் ஜோர்டானை ரூ.3.60 கோடிக்கும், ஆடம் மில்னேவை ரூ.1.90 கோடிக்கும் ஏலத்தில் எடுத்தது. 4 ஐபிஎல் போட்டிகளில் ஆடிய ஜோர்டான் சோபிக்காததால் அதன்பின்னர் பென்ச்சில் உட்காரவைக்கப்பட்டார். ஒரேயொரு போட்டியில் மட்டுமே ஆடிய ஆடம் மில்னே காயம் காரணமாக அந்த சீசனிலிருந்தே விலகிவிட்டார். இந்நிலையில், அவர்கள் இருவரையும் சிஎஸ்கே அணி விடுவிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

click me!