டி20 உலக கோப்பை: முக்கியமான போட்டியில் ஜிம்பாப்வேவை எதிர்கொள்ளும் இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்

By karthikeyan V  |  First Published Nov 5, 2022, 5:39 PM IST

டி20 உலக கோப்பையில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 


டி20 உலக கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சூப்பர் 12 போட்டிகள் நாளையுடன் முடிகின்றன. க்ரூப் 1லிருந்து நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி தொடரைவிட்டு வெளியேறியது.

க்ரூப் 2ல் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறிவிடும். 6 புள்ளிகளை பெற்றுள்ள இந்திய அணி கடைசி சூப்பர் 12 போட்டியில் நாளை ஜிம்பாப்வேவை எதிர்கொள்கிறது. 5 புள்ளிகளை பெற்று 2ம் இடத்தில் இருக்கும் தென்னாப்பிரிக்கா அணி கடைசி போட்டியில் நெதர்லாந்தை எதிர்கொள்கிறது. இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் கடைசிபோட்டியில் முறையே ஜிம்பாப்வே மற்றும் நெதர்லாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றுவிடும். எனவே இந்தியா 8 புள்ளிகளுடனும், தென்னாப்பிரிக்கா 7 புள்ளிகளுடனும் அரையிறுதிக்கு முன்னேறிவிடும்.

Latest Videos

undefined

டி20 உலக கோப்பை: இலங்கையை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து.! தொடரைவிட்டு வெளியேறியது ஆஸ்திரேலியா

இந்த 2 அணிகளில் ஒன்று தோற்று, வங்கதேசத்தை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி பெற்றால் பாகிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேற முடியும். ஆனால் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் அவற்றிற்கு நிகரான அணிகளை எதிர்கொள்ளவில்லை. அதனால் கண்டிப்பாக வெற்றி பெற்றுவிடும் என்பதால் பாகிஸ்தானுக்கு கண்டிப்பாகவே வாய்ப்பில்லை.

நாளை மெல்பர்னில் நடக்கும் ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம். இந்திய அணி சிறப்பாக ஆடி இந்த உலக கோப்பையில் வெற்றி பெற்றுவருவதால் இந்திய அணியின் காம்பினேஷனை மாற்ற வேண்டிய அவசியமில்லை. அதனால் இதுவரை ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் இந்திய அணி களமிறங்கும்.

எக்காரணத்தை முன்னிட்டும் ஜடேஜாவை விட்டுவிடக்கூடாது! சிஎஸ்கே அணி நிர்வாகத்திடம் ஸ்ட்ரிக்ட்டா சொன்ன கேப்டன் தோனி

உத்தேச இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), அக்ஸர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங்.
 

click me!