ENG vs SL: ஆரம்பத்தில் அதிரடியாக சீறி கடைசியில் பெட்டி பாம்பாய் அடங்கிய இலங்கை..! இங்கிலாந்துக்கு எளிய இலக்கு

Published : Nov 05, 2022, 03:13 PM IST
ENG vs SL: ஆரம்பத்தில் அதிரடியாக சீறி கடைசியில் பெட்டி பாம்பாய் அடங்கிய இலங்கை..! இங்கிலாந்துக்கு எளிய இலக்கு

சுருக்கம்

டி20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்றில் க்ரூப் 1ன் கடைசி போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணி, 20 ஓவரில் 141 ரன்கள் அடித்து, 142 ரன்கள் என்ற இலக்கை இங்கிலாந்துக்கு நிர்ணயித்துள்ளது.  

டி20 உலக கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், க்ரூப் 1லிருந்து நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறிவிட்டது. க்ரூப் 1ல் 2வது அணியாக அரையிறுதிக்கு முன்னேறுவது யார் என்பதை தீர்மானிக்கும் முக்கியமான போட்டி இன்று நடந்துவருகிறது.

ஆஸ்திரேலிய அணி 7 புள்ளிகளுடன் 2ம் இடத்தில் இருக்கிறது. இன்று சிட்னியில் நடந்துவரும் இங்கிலாந்து - இலங்கை இடையேயான போட்டியில் இங்கிலாந்து ஜெயித்தால் 7 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியாவை விட சிறந்த நெட் ரன்ரேட்டை பெற்றிருப்பதால் இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறும். ஒருவேளை இந்த போட்டியில் இலங்கை ஜெயித்தால் ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கு முன்னேறும்.

எக்காரணத்தை முன்னிட்டும் ஜடேஜாவை விட்டுவிடக்கூடாது! சிஎஸ்கே அணி நிர்வாகத்திடம் ஸ்ட்ரிக்ட்டா சொன்ன கேப்டன் தோனி

எனவே அரையிறுதிக்கு முன்னேற கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் இலங்கைக்கு எதிராக ஆடிவருகிறது இங்கிலாந்து அணி. இலங்கைக்கு இந்த போட்டியில் இழப்பதற்கு எதுவுமில்லை. ஆனால் இங்கிலாந்துக்கு இது முக்கியமான போட்டி. 

சிட்னியில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் தசுன் ஷனாகா பேட்டிங்கை தேர்வு செய்தார். இலங்கை அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பிரமோத் மதுஷனுக்கு பதிலாக சாமிகா கருணரத்னே ஆடுகிறார்.

இலங்கை அணி:

பதும் நிசாங்கா, குசால் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), தனஞ்செயா டி சில்வா, சாரித் அசலங்கா, பானுகா ராஜபக்சா, தசுன் ஷனாகா, வனிந்து ஹசரங்கா, மஹீஷ் தீக்‌ஷனா, சாமிகா கருணரத்னே, லஹிரு குமாரா, கசுன் ரஜிதா.

இங்கிலாந்து அணி:

ஜோஸ் பட்லர் (கேப்டன், விக்கெட் கீப்பர்), அலெக்ஸ் ஹேல்ஸ், டேவிட் மலான், ஹாரி ப்ரூக், பென் ஸ்டோக்ஸ், மொயின் அலி, லியாம் லிவிங்ஸ்டோன், கிறிஸ் வோக்ஸ், சாம் கரன், அடில் ரஷீத், மார்க் உட்.

முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணியின் தொடக்க வீரர் பதும் நிசங்காவும் குசால் மெண்டிஸும் அதிரடியாக தொடங்கினர். குசால் மெண்டிஸ் 18 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் ஒருமுனையில் பதும் நிசாங்கா இங்கிலாந்து பவுலிங்கை அடித்து ஆட, மறுமுனையில் தனஞ்செயா டி சில்வா(9), சாரித் அசலங்கா (8) ஆகியோர் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினார்.

விராட் கோலி பண்ணது கண்டிப்பா ஃபேக் ஃபீல்டிங்.. அது தப்பு தான்..! முன்னாள் இந்திய வீரர் அதிரடி

அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த பதும் நிசாங்கா 45 பந்தில் 2 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 67 ரன்களை குவித்து 16வது ஓவரில் ஆட்டமிழந்தார். நிசாங்கா ஆட்டமிழந்த போது இலங்கை அணியின் ஸ்கோர் 16.3 ஓவரில் 118 ரன்கள். அதன்பின்னர் 21 பந்துகளில் இலங்கை அணியால் 23 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. பானுகா ராஜபக்சா 22 ரன் மட்டுமே அடித்தார். அதிரடியாக தொடங்கிய இலங்கை அணியின் ஃபினிஷிங் மோசமாக இருந்ததால் 20 ஓவரில் 141 ரன்கள் மட்டுமே அடித்து, 142 ரன்கள் என்ற எளிய இலக்கை இங்கிலாந்துக்கு நிர்ணயித்துள்ளது.

அரையிறுதிக்கு முன்னேற வெற்றி கட்டாயத்துடன் களமிறங்கும் இங்கிலாந்து அணிக்கு இது எளிய இலக்கு என்பதால் எளிதாக அடித்து இங்கிலாந்து அரையிறுதிக்கு முன்னேறிவிடும்.
 

PREV
click me!

Recommended Stories

வைபவ் சூர்யவன்ஷி ருத்ரதாண்டவம்.. மின்னல் வேக சதம்.. 433 ரன்கள் குவிப்பு.. பிரமிக்க வைத்த இந்தியா!
IND VS SA 3வது டி20.. சுப்மன் கில் அதிரடி நீக்கம்?.. சிஎஸ்கே வீரர் கம்பேக்.. பிளேயிங் லெவன் இதோ!