டி20 உலக கோப்பை: வாழ்வா சாவா போட்டியில் இலங்கையை எதிர்கொள்ளும் இங்கிலாந்து! டாஸ் ரிப்போர்ட்

டி20 உலக கோப்பையில் க்ரூப் 1ல் நடக்கும் சூப்பர் 12 சுற்றின் கடைசி போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
 

sri lanka win toss opt to bat against england in t20 world cup

டி20 உலக கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், க்ரூப் 1லிருந்து நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறிவிட்டது. க்ரூப் 1ல் 2வது அணியாக அரையிறுதிக்கு முன்னேறுவது யார் என்பதை தீர்மானிக்கும் முக்கியமான போட்டி இன்று நடக்கிறது.

ஆஸ்திரேலிய அணி 7 புள்ளிகளுடன் 2ம் இடத்தில் இருக்கிறது. இன்று சிட்னியில் நடக்கும் இங்கிலாந்து - இலங்கை இடையேயான போட்டியில் இங்கிலாந்து ஜெயித்தால் 7 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியாவை விட சிறந்த நெட் ரன்ரேட்டை பெற்றிருப்பதால் இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறும். ஒருவேளை இந்த போட்டியில் இலங்கை ஜெயித்தால் ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கு முன்னேறும்.

Latest Videos

எக்காரணத்தை முன்னிட்டும் ஜடேஜாவை விட்டுவிடக்கூடாது! சிஎஸ்கே அணி நிர்வாகத்திடம் ஸ்ட்ரிக்ட்டா சொன்ன கேப்டன் தோனி

சிட்னியில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் தசுன் ஷனாகா பேட்டிங்கை தேர்வு செய்தார். இலங்கை அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பிரமோத் மதுஷனுக்கு பதிலாக சாமிகா கருணரத்னே ஆடுகிறார்.

இலங்கை அணி:

பதும் நிசாங்கா, குசால் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), தனஞ்செயா டி சில்வா, சாரித் அசலங்கா, பானுகா ராஜபக்சா, தசுன் ஷனாகா, வனிந்து ஹசரங்கா, மஹீஷ் தீக்‌ஷனா, சாமிகா கருணரத்னே, லஹிரு குமாரா, கசுன் ரஜிதா.

விராட் கோலி பண்ணது கண்டிப்பா ஃபேக் ஃபீல்டிங்.. அது தப்பு தான்..! முன்னாள் இந்திய வீரர் அதிரடி

இங்கிலாந்து அணி:

ஜோஸ் பட்லர் (கேப்டன், விக்கெட் கீப்பர்), அலெக்ஸ் ஹேல்ஸ், டேவிட் மலான், ஹாரி ப்ரூக், பென் ஸ்டோக்ஸ், மொயின் அலி, லியாம் லிவிங்ஸ்டோன், கிறிஸ் வோக்ஸ், சாம் கரன், அடில் ரஷீத், மார்க் உட்.
 

vuukle one pixel image
click me!
vuukle one pixel image