எக்காரணத்தை முன்னிட்டும் ஜடேஜாவை விட்டுவிடக்கூடாது! சிஎஸ்கே அணி நிர்வாகத்திடம் ஸ்ட்ரிக்ட்டா சொன்ன கேப்டன் தோனி

By karthikeyan VFirst Published Nov 4, 2022, 9:12 PM IST
Highlights

ஐபிஎல் 16வது சீசனுக்கு முன்பாக சிஎஸ்கே அணியிலிருந்து விலக ரவீந்திர ஜடேஜா விரும்பிய நிலையில், அவரை விடுவிக்கக்கூடாது என்று தோனி கண்டிப்புடன் சிஎஸ்கே நிர்வாகத்திடம் கூறியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

சிஎஸ்கே அணியின் செல்லப்பிள்ளையாக திகழ்பவர் ரவீந்திர ஜடேஜா. சிஎஸ்கே அணியின் முக்கியமான வீரராகவும், கேப்டன் தோனியின் ஆஸ்தான வீரராகவும் திகழ்பவர் ஜடேஜா. ஐபிஎல்லில் 210 போட்டிகளில் ஆடி 2502 ரன்களை குவித்துள்ள ஜடேஜா, 132 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்துவகையிலும் அணிக்கு சிரப்பான பங்களிப்பை செய்யக்கூடிய மிகப்பெரிய மேட்ச் வின்னர் ஜடேஜா.

ஐபிஎல்லில் 2012ம் ஆண்டிலிருந்து சிஎஸ்கே அணியில் ஆடிவரும் ஜடேஜா, சிஎஸ்கே அணிக்கு மிகச்சிறந்த பங்களிப்பை செய்து, அணியின் முக்கியமான வீரராக திகழ்கிறார். கடந்த சீசனில் சிஎஸ்கே அணியின் கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்பட்ட நிலையில், தொடர் தோல்விகளின் விளைவாக சீசனின் இடையே தோனி மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இது ஜடேஜாவிற்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதனால் அந்த சீசனில் அதன்பின்னர் அவர் ஆடவில்லை.

விராட் கோலி பண்ணது கண்டிப்பா ஃபேக் ஃபீல்டிங்.. அது தப்பு தான்..! முன்னாள் இந்திய வீரர் அதிரடி

கேப்டனாக நியமிக்கப்பட்டு பின்னர் சீசனின் இடையே மாற்றப்பட்டதை பெரும் அவமானமாகவும், தனக்கு இழைக்கப்பட்ட அநீதியாகவும் கருதிய ஜடேஜா, சிஎஸ்கே அணி மீது கடும் அதிருப்தியடைந்தார். சிஎஸ்கே அணியை சமூக வலைதளத்தில் அன்ஃபோலா செய்தார். அதனால் அடுத்த சீசனில் ஜடேஜா வேறு அணிக்கு ஆடலாம் என்று பேசப்பட்டது. அவரை 2 அணிகள் கேட்டதாகவும் கூறப்பட்டது. அண்மையில் கூட டெல்லி கேபிடள்ஸ் அணியுடன் ஜடேஜாவை சிஎஸ்கே டிரேடிங் செய்யவுள்ளதாக தகவல் வெளியானது.

ஆனால் கடந்த சீசனுக்கு முன் நடந்த மெகா ஏலத்தில் ஜடேஜாவை சிஎஸ்கே அணி ஒப்பந்தம் செய்ததால், ஜடேஜா இன்னும் 2 சீசன்களுக்கு சிஎஸ்கே அணியின் ஒப்புதல் இல்லாமல் அந்த அணியிலிருந்து விலகமுடியாது.சிஎஸ்கே அணி அனுமதித்தால் மட்டுமே அவரால் வேறு அணிக்கு செல்ல முடியும். வேண்டுமென்றால் இன்னும் 2 ஆண்டுகளுக்கு ஐபிஎல்லில் ஆடாமல் ஜடேஜாவால் விலகமுடியும். ஆனால் ஜடேஜா அதை செய்யமாட்டார். 

ஆனால் ஒருகட்டத்தில், தங்கள் அணிக்கு விளையாட விரும்பாத வீரரை எந்த அணியும் மல்லுக்கட்டி வைத்திருக்க விரும்பாது. அந்தவகையில் ஜடேஜா அடுத்த சீசனில் சிஎஸ்கேவிலிருந்து விலகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. அடுத்த சீசனுக்கான மினி ஏலம் டிசம்பர் மாதம் நடக்கவுள்ள நிலையில், அனைத்து அணிகளும் தக்கவைக்கும் மற்றும் விடுவிக்கும் வீரர்களை அவரும் 16ம் தேதி அறிவிக்கவேண்டும்.

டி20 உலக கோப்பை: இலங்கையின் கையில் ஆஸ்திரேலியாவின் குடுமி..! புள்ளி பட்டியல் அப்டேட்

இந்நிலையில், ஜடேஜாவின் திறமையை நன்கறிந்த சிஎஸ்கே கேப்டன் தோனி, எக்காரணத்தை முன்னிட்டும் ஜடேஜாவை விடுவிக்கக்கூடாது. அவர் அணிக்கு கண்டிப்பாக தேவை. எனவே அவரை விட்டுவிடக்கூடாது என்று சிஎஸ்கே அணி நிர்வாகத்திடம் திட்டவட்டமாக தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தோனியின் பேச்சை மீறி சிஎஸ்கே செயல்படாது. எனவே கண்டிப்பாக ஜடேஜாவை சிஎஸ்கே விடுவிக்க வாய்ப்பே இல்லை. 
 

click me!