ஃபைனலில் ஹிமாச்சல் பிரதேசத்தை வீழ்த்தி முதல் முறையாக சையத் முஷ்டாக் அலி டிராபியை வென்றது மும்பை அணி

By karthikeyan VFirst Published Nov 5, 2022, 8:24 PM IST
Highlights

சையத் முஷ்டாக் அலி டிராபி ஃபைனலில் ஹிமாச்சல் பிரதேச அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை அணி முதல் முறையாக சையத் முஷ்டாக் அலி டிராபியை வென்றது.
 

உள்நாட்டு டி20 தொடரான சையத் முஷ்டாக் அலி தொடரின் ஃபைனலுக்கு மும்பை மற்றும் ஹிமாச்சல் பிரதேச அணிகள் முன்னேறின. இன்று கொல்கத்தா ஈடன் கார்டனில் நடந்த ஃபைனலில் டாஸ் வென்ற மும்பை அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

மும்பை அணி:

பிரித்வி ஷா, அஜிங்க்யா ரஹானே(கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷ்ரேயாஸ் ஐயர், சர்ஃபராஸ் கான் (விக்கெட் கீப்பர்), ஷிவம் துபே, ஷாம்ஸ் முலானி, தனுஷ் கோட்டியான், அமான் ஹக்கிம் கான், துஷான் தேஷ்பாண்டே, மோஹித் அவஸ்தி.

ஐபிஎல் 2023: சிஎஸ்கே அணி கழட்டிவிடும் 2 வீரர்கள் இவர்கள் தான்..!

ஹிமாச்சல் பிரதேச  அணி:

பிரசாந்த் சோப்ரா, அன்குஷ் பைன்ஸ் (விக்கெட் கீப்பர்), சுமீத் வெர்மா, ஆகாஷ் வசிஷ்ட், நிகில் கங்க்டா, ஏகாந்த் சென், ரிஷி தவான் (கேப்டன்), சித்தார்த் ஷர்மா, மயன்க் தகர், கன்வார் அபினய் சிங், வைபவ் அரோரா, நிதின் ஷர்மா.

முதலில் பேட்டிங் ஆடிய ஹிமாச்சல் பிரதேச அணியின் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களுக்கு மளமளவென ஆட்டமிழந்ததால் 9.4 ஓவரில் வெறும் 58 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது அந்த அணி. பின்வரிசை வீரர்களான ஏகாந்த் சென் (37) மற்றும் மயன்க் தகர் (12 பந்தில் 21 ரன்) ஆகியோரின் பங்களிப்பால் 20 ஓவரில் 143 ரன்கள் அடித்தது ஹிமாச்சல் பிரதேச அணி.

144 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய மும்பை அணியில் பிரித்வி ஷா, ஷ்ரேயாஸ் ஐயர், ரஹானே ஆகிய சர்வதேச தரத்திலான வீரர்கள் மற்றும் சர்ஃபராஸ் கான், ஷிவம் துபே, யஷஸ்வி ஜெய்ஸ்வால் என திறமையான இளம் வீரர்கள் இருந்தும், மும்பை அணி கடைசி ஓவரில் தான் 144 ரன்கள் என்ற இலக்கை அடித்தது. பிரித்வி ஷா(11) மற்றும் கேப்டன் ரஹானே(1) ஆகிய 2 தொடக்க வீரர்களும் சோபிக்கவில்லை. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 27 ரன்களும், ஷ்ரேயாஸ் ஐயர் 34 ரன்களும் அடித்து ஆட்டமிழந்தனர். அதன்பின்னர் ஷிவம் துபே, அமான் கான் என பின்வரிசை வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழக்க, ஒருமுனையில் நிலைத்து நின்று 36 ரன்கள் அடித்த சர்ஃபராஸ் கான் கடைசிவரை களத்தில் நின்று போட்டியை முடித்து கொடுத்தார்.

இந்திய அணி அவரை ஆடவைத்து ரிஷப் பண்ட்டை உட்காரவைப்பது பெரும் தவறு! ஆஸி., முன்னாள் கேப்டன் கடும் விளாசல்

கடைசி ஓவரில் இலக்கை அடித்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மும்பை அணி முதல் முறையாக சையத் முஷ்டாக் அலி டிராபியை வென்று சாதனை படைத்தது.
 

click me!