IND vs AUS:எப்பேர்ப்பட்ட பிளேயர் ராகுல்; அப்படிலாம் ஈசியா தூக்கமுடியாது! கேஎல் ராகுலுக்கு கம்பீர் ஆதரவுக்குரல்

By karthikeyan V  |  First Published Feb 24, 2023, 4:10 PM IST

ஃபார்மில் இல்லாமல் தொடர்ந்து சொதப்பிவரும் கேஎல் ராகுல் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலும் சொதப்பிய நிலையில், அவரை அணியிலிருந்து நீக்கிவிட்டு ஷுப்மன் கில்லை ரோஹித்துடன் ஓபனிங்கில் இறக்க வேண்டும் என்ற வலியுறுத்தல்கள் வலுத்த நிலையில், ராகுலுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார் கௌதம் கம்பீர்.
 


இந்திய அணியின் தொடக்க வீரர் கேஎல் ராகுல். டெஸ்ட் அணியில் ரோஹித்துடன் அவர் தான் கடந்த சில ஆண்டுகளாக தொடக்க வீரராக ஆடிவருகிறார். இந்தியாவிற்காக 47 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 13 அரைசதங்கள் மற்றும் 7 சதங்களுடன்  2642 ரன்கள் அடித்துள்ளார். 

ராகுல் திறமையான வீரர் தான் என்றாலும், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட்டில் சரியாக ஆடவில்லை. அண்மைக்காலமாக அவர் மோசமான ஃபார்மில் இருந்துவருகிறார். 2022ம் ஆண்டிலிருந்து கடைசி 11 இன்னிங்ஸ்களில் ராகுல் அடித்த ஸ்கோர் - 50, 8, 12, 10, 22, 23, 10, 2, 20, 17, 1 ஆகும். கடைசி 10 இன்னிங்ஸ்களில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை.

Tap to resize

Latest Videos

IND vs AUS: அம்மாவுக்கு உடம்பு சரியில்ல; 3வது டெஸ்ட்டிலிருந்து கம்மின்ஸ் விலகல்! மீண்டும் கேப்டன் ஆனார் ஸ்மித்

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலும் அவர் சரியாக ஆடவில்லை. டாப் ஃபார்மில் இருக்கும் ஷுப்மன் கில்லை தொடக்க வீரராக இறக்காமல் ராகுலை இறக்கியது கடும் விமர்சனத்துக்குள்ளானது.

ராகுல் இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக இருப்பதால் தான் அவரை ஆடும் லெவனில் புறக்கணிக்க முடியவில்லை. அவர் துணை கேப்டனாக இருப்பதற்கே தகுதியில்லாத வீரர். அவரை நீக்கிவிட்டு ஷுப்மன் கில்லை தொடக்க வீரராக இறக்க வேண்டும் என்று வெங்கடேஷ் பிரசாத் விமர்சித்திருந்த நிலையில், ரசிகர்களும் ராகுலின் ஆட்டத்தால் அதிருப்தியடைந்தனர்.

அதன்விளைவாகவோ என்னவோ, ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கடைசி 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் துணை கேப்டன்சியிலிருந்து நீக்கப்பட்டார் ராகுல். ராகுல் மீது விமர்சனங்களும் அழுத்தமும் அதிகரித்துவரும் நிலையில், அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார் கௌதம் கம்பீர்.

ஒரு கேப்டன் இப்படி தொந்தியும் தொப்பையுமா இருக்கலாமா..? அசிங்கமா இல்ல..? ரோஹித்தை விளாசிய கபில் தேவ்

ராகுல் குறித்து பேசிய கௌதம் கம்பீர், கேஎல் ராகுல் இந்திய அணியிலிருந்து நீக்கப்படக்கூடாது. ஏதாவது ஒரு முன்னாள் வீரர் விமர்சிக்கிறார் என்பதற்கெல்லாம் ராகுலை அணியிலிருந்து நீக்கக்கூடாது. எப்பேர்ப்பட்ட கிரிக்கெட் வீரரும் மோசமான ஃபார்மை சந்திருப்பார். அதை சந்திக்காத வீரரே இருக்க முடியாது. திறமையான வீரர்களை எப்போதுமே ஆதிரிக்க வேண்டும். ரோஹித் சர்மாவும் மோசமான கட்டத்தை கடந்துதான் வந்திருக்கிறார். ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டப்பட்டு அதன்பின்னர் இப்போதுதான் ரோஹித் சர்மா ஜொலிக்கிறார். ரோஹித்துக்கு ஆதரவளித்து தொடர் வாய்ப்பளித்ததால் தான் இன்று அவர் ஜொலிக்கிறார். அதேபோலவே ராகுலும் ஜொலிப்பார் என்று கம்பீர் கூறியுள்ளார்.
 

click me!