India vs Pakistan: இந்திய அணிக்கு வார்னிங் கொடுத்த முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர்!

By Rsiva kumar  |  First Published Sep 8, 2023, 1:19 PM IST

பாகிஸ்தான் அணியில் மிக சிறப்பான பந்து வீச்சாளர்கள் இருப்பதால், இந்திய அணி வீரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.


ஆசிய கோப்பை 2023 தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், லீக் சுற்றுப் போட்டிகள் முடிந்த நிலையில், சூப்பர் 4 சுற்று போட்டிகள் நடந்து வருகிறது. இதில், முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் மோதின. இதில், பாகிஸ்தான் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து நாளை இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான 2ஆவது சூப்பர் சுற்று போட்டி நடக்க உள்ளது.

டொனால்ட் டிரம்ப் உடன் கோல்ஃப் விளையாடிய தோனி: வைரலாகும் வீடியோ!

Tap to resize

Latest Videos

இதையடுத்து வரும் 10 ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3ஆவது சூப்பர் 4 சுற்று போட்டி நடக்க உள்ளது. ஆனால், இந்தப் போட்டியானது மழையால் பாதிக்கப்பட உள்ளது. இந்தப் போட்டி மட்டுமின்றி இலங்கை கொழும்புவில் நடக்க உள்ள சூப்பர் 4 சுற்று போட்டிகள் மழையால் பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், வேற மைதானத்திற்கு சூப்பர் 4 சுற்று போட்டிகள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

13 ஆண்டுகளுக்குப் பிறகு அமெக்க ஓபன் டென்னிஸில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய ரோகன் போபண்ணா!

எனினும், அது குறித்து எந்த அறிவிப்பும் இதுவரையில் வெளியாகவில்லை. இந்த நிலையில் தான், பாகிஸ்தான் அணியில் ஷாஹின் அஃப்ரிடி, ஹரீஷ் ராஃப், நசீம் ஷா என்று மிகச்சிறந்த பந்து வீச்சாளர்கள் இருக்கின்றனர். தற்போது உள்ள சூழலில் பாகிஸ்தான் அணி தான் டாப் கிளாஸ் பந்து வீச்சாளர்களை கொண்டுள்ளது. உலகில் எந்த பேட்ஸ்மேனாலும் பாகிஸ்தான் பந்து வீச்சிற்கு எதிராக ரன்கள் குவிக்க முடியாமல் திணறி வருகின்றனர். இவ்வளவு ஏன், இந்திய அணி கூட லீக் போட்டியில் பாகிஸ்தானிற்கு எதிரான 266 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இந்தியாவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் மழை: தானாக சிக்கிய பிசிசிஐ!

இப்படிப்பட்ட சூழலில் வரும் 10 ஆம் தேதி பாகிஸ்தானிற்கு எதிரான சூப்பர் 4 சுற்றுப் போட்டியில் இந்திய அணி விளையாட உள்ளது. ஆதலால், இந்திய அணி வீரர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றியவர்களின் பட்டியலில் பாகிஸ்தானின் ஹரீஷ் ராஃப் 9 விக்கெட்டுகளும், ஷாஹீன் அஃப்ரிடி மற்றும் நசீம் ஷா ஆகியோர் தலா 7 விக்கெட்டுகளும் கைப்பற்றியுள்ளனர்.

IND vs PAK: ஹர்திக் பாண்டியா ஷூ லேஸை கட்டிவிட்ட ஷதாப் கான்; பாராட்டு தெரிவித்து நடிகை இன்ஸ்டாவில் பதிவு!

click me!