அமெரிக்கா சென்றுள்ள எம்.எஸ்.தோனி அங்கு முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உடன் கோல்ஃப் விளையாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி தற்போது அமெரிக்காவில் தனது பொன்னான நேரத்தை செலவிட்டு வருகிறார். வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்காக தன்னை தயார்படுத்தி வருகிறார். இதற்காக ஜிம்மில் உடற்பயிற்சியும் மேற்கொண்டு வருகிறார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.
13 ஆண்டுகளுக்குப் பிறகு அமெக்க ஓபன் டென்னிஸில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய ரோகன் போபண்ணா!
தற்போது அமெரிக்காவில் இருக்கும் தோனி, அங்கு நியூயார்க்கில் நடைபெறும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதிப் போட்டியை கண்டு ரசித்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் வெளியானது. இந்த நிலையில், தான் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தோனியை கோல்ஃப் விளையாட அழைத்துள்ளார்.
இந்தியாவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் மழை: தானாக சிக்கிய பிசிசிஐ!
அவரது அழைப்பை ஏற்ற தோனி, அவரை சந்தித்து பேசி அவருடன் கோல்ஃப் விளையாடியுள்ளார். இது தொடர்பான வீடியோவும், புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் தோனி நீண்ட தலைமுடியுடன், தாடியும் வைத்த நிலையில் காணப்படுகிறார்.
MS Dhoni playing golf with Donald Trump.
- The craze for Dhoni is huge. pic.twitter.com/fyxCo3lhAQ