இந்தியா ஜெயிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது: முகமது கைஃப்!

By Rsiva kumar  |  First Published Jul 9, 2023, 3:43 PM IST

2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை இந்திய அணி வெல்வதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் கூறியுள்ளார்.


இந்தியா நடத்தும் உலகக் கோப்பை தொடர் வரும் அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19 ஆம் தேதி வரையில் நடக்கிறது. 10 அணிகள் இடம் பெற்று இந்த உலகக் கோப்பை தொடர் 10 மைதானங்களில் நடக்கிறது. கடந்த 2011 ஆம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி ஒரு நாள் தொடரை கைப்பற்றியது.

வெஸ்ட் இண்டீஸ் எல்லாம் ஒன்னுமே இல்ல; ஜூஜூபி, வரலாறு சொல்லுது!

Tap to resize

Latest Videos

இந்த நிலையில், இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் கூறியிருப்பதாவது: சொந்த மண்ணில் நடக்கும் போட்டி என்பதால், இந்தியாவிற்கு தான் அதிக வெற்றி வாய்ப்புகள் இருக்கிறது. மற்ற அணிகளை விட இந்திய மைதானம் பற்றி அனிக்கு நன்கு தெரியும்.

இந்தியா, பாகிஸ்தான் செய்யாத சாதனை; வங்கதேசத்தில் சொந்த மண்ணில் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் சாதனை!

உலகக் கோப்பை தொடரில் சுழற்பந்து வீச்சாளர்கள் அதிக தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். திறமை வாய்ந்த வீரர்கள் இருக்கிறார்கள். ஆனால், சீனியர் வீரர்கள் உலகக் கோப்பை தொடருக்கு தயாராக இருக்க வேண்டும். உடல் தகுதியுடனும் இருக்க வேண்டும். அதோடு, நல்ல ஃபார்மில் இருந்தால் தான் உலகக் கோப்பையை வெல்ல முடியும்.

கடைசி ஓவரில் 1 விக்கெட், 4 ரன்களில் பரிதாபமாக வெளியேறிய சீகம் மதுரை பாந்தர்ஸ்: குவாலிஃபையர் 2ல் நெல்லை!

பந்து வீச்சில் சிறப்பாக இருந்தால் மட்டும் போதாது, பேட்டிங்கிலும் சிறப்பாக இருக்க வேண்டும். ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். காயம் காரணமாக ஓய்வில் இருந்த பும்ரா உலகக் கோப்பை தொடருக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முடி திருத்தம் செய்யும் கடைக்கு சென்று காசு கொடுக்காமல் வந்த அலெக்ஸ் கேரிக்கு கெடு விதித்த கடைக்காரர்!

பும்ரா மட்டுமின்றி முகமது சிராஜ், முகமது ஷமி ஆகியோர் பிளேயிங் 11ல் இடம் பெற்றால் இந்தியாவை வீழ்த்துவது கடினமாக இருக்கும். இதே போன்று சுழற்பந்து வீச்சில் ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தி வருகிறார்கள் என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!